சிட்னி:ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அதி நவீன கார்கள் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பயன்படுவது வழக்கம். ஆனால் சுற்றுச்சூழல் மீதான அக்கறை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கூட இந்த காரை பயன்படுத்தலாம்.

யாருக்கு தெரியும்? அப்படி இந்த காரில் என்ன ஸ்பெஷல் என்றுதானே கேட்கிறீர்கள்…

இந்த காரின் வெளிப்புறம் முழுக்க மரத்தால் செய்யப்பட்டது.  ’ஸ்பிளிண்டர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கார் இசாக் கோஹன் என்ற கார்பெண்டரின் 13 வருட உழைப்பில் உருவானது.

வெறும் மரத்துக்காகவா 13 வருஷம் என்று யோசிக்கிறீர்களா: இந்த வீடியோவைப் பாருங்கள் புரியும்..

 

முதன்முறையாக சந்தித்துக்கொள்ளும் செல்ல நாயும், சுட்டிப் பிள்ளையும்!: ரசனையான வீடியோ

பொதுவாக உரிமையாளரின் செல்லப் பிள்ளையாக உள்ள நாய்கள் அவர்களின் சொந்தப் பிள்ளை புதுவரவாக வீட்டுக்குள் வரும்போது கொஞ்சம் பொறாமையுடன் தூரத்திலிருந்துதான் கண்காணிக்கும்!

அமெரிக்காவின் ஸ்காட் தம்பதி, தமது குழந்தையை, செல்ல நாய் ஏற்றுக் கொள்ளுமா? என்கிற பயம் கலந்த ஏக்கத்துடன் ஒருவரை ஒருவர் சந்திக்க விடாமல் சில மாதங்கள் தனித் தனியாகவே வைத்திருந்தனர்.

சமீபத்தில் அவர்கள் இருவரையும் முதன்முறையாக சந்திக்க வைத்த, அந்த உன்னத நிமிடங்களை வீடியோவாக பதிவு செய்தனர். அந்த அழகான நிமிடங்களை வீடியோ வடிவில் யூடியூபிலும் வெளியிட்டுள்ளனர்!

அதனை ரசிக்க நீங்களும் தயாராகுங்கள்!

Share.
Leave A Reply