சைக்கிளில் சென்ற மாணவி முன் ஆட்டோவில் சாகசம் செய்து மாணவியை காயப்படுத்திய ஆட்டோ சாரதியொருவரை சுன்னாகம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி நேற்று பிற்பகல் பாடசாலை முடிவடைந்ததும் வழமை போன்று சைக்கிளில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆட்டோ சாரதி தனது ஆட்டோவால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மாணவி முன் சாகசம் செய்ததில், நிலை தடுமாறிய மாணவி சைக்கிளில் இருந்து வீழ்ந்து கைமுறிந்ததுடன் முகத்திலும் காயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து ஆட்டோ சாரதி சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நீதிமன்றில் அலைபேசி மற்றும் சீ.டி.எம்.ஏ தொலைபேசியுடன் வழக்கு விசாரணைகளுக்கு வந்த 8 பேருக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று திங்கட்கிழமை (21) தீர்ப்பளித்தார்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருந்த போது, வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த சீ.டி.எம்.ஏ தொலைபேசி அதிக சத்தத்தில் ஒலித்தது.
இதன்போது குறித்த பெண்ணை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், நீதிமன்றத்துக்கு வந்த அனைவரின் அலைபேசிகளையும் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசி, மற்றும் தொலைபேசி உரிமையாளர்கள் 8 பேருக்கும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனைவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான், 1,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
கடந்த 18ஆம் திகதி நீதிமன்றில் தொலைபேசியுடன் வந்திருந்த 26 நபர்களுடைய அலைபேசியினை பறிமுதல் செய்த நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து அபராதம் விதித்திருந்தார்.
இதன் பின்னர் நீதிமன்றவளாகத்துக்குள் அலைபேசியுடன் வருவதனை தவிர்க்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.