காதல் ஜோடி இருவர் உடலுறவில் ஈடுபட்டபோது முன்னாள் கணவனின் பெயரை தவறுதலாக உச்சரித்த காதலியின் வயிற்றை வெறும் கைகளால் கிழித்து கொன்ற கொடூர காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஃபிடல் லோபஸ் (24) என்ற இளைஞரும், மரியா நெமெத் (31) என்ற பெண்ணும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

மரியாவிற்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்து அவரை விட்டு பிரிந்து தற்போது ஃபிடலுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று வீட்டில் இருந்து இருவரும் உற்சாகமாக மது அருந்தியுள்ளனர்.

பின்னர், மதுபோதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டபோது, மரியா தவறுதலாக தன்னுடைய முன்னாள் கணவனின் பெயரை உச்சரித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த காதலன் மரியாவை அடித்து கீழே வீழ்த்திவிட்டு, மரியா மீது அமர்ந்து தன்னுடைய விரல் நகங்களால் மரியாவின் வயிற்றை கிழித்து குடலை வெளியே எடுத்து வீசியுள்ளான்.

மரண வலியால் துடித்த காதலியின் அந்தரங்க உறுப்புகளில் பல்வேறு பொருட்களை திணித்து மிக கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.

பின்னர், மிக சாதாரணமாக சிகரெட் ஒன்றை பிடித்த அவன், பொலிசாரை தொடர்புக்கொண்டு ‘தன்னுடய காதலி மூச்சின்றி மயக்கமாக கிடக்கிறார்’ என தகவல் அளித்துள்ளான்.

பொலிசாருக்கு தகவல் அளித்துவிட்டு குளியல் அறைக்கு சென்று தன் மீது இருந்த ரத்தக்கறைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு தனது காதலியின் சடலம் கிடந்த இடத்தில் வந்து அமர்ந்து அழுது புலம்பியுள்ளான்.

இந்நிலையில், வீட்டிற்கு பொலிசார் வந்து விசாரணை செய்கையில் ‘தன்னுடைய காதலி தான் விதவிதமான முறையில் உறவு கொள்ள வேண்டும்’ என வற்புறுத்தியதால் எதிர்பாராத நிலையில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.

தற்போது நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்தபோது, மதுபோதையில் இருந்ததால் எதிர்பாராத விதமாக காதலியை கொன்று விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தற்போது காதலனை சிறையில் அடைத்துள்ள பொலிசார், அவர் மீதான வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply