நேற்று இரவு கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் பலரும் பார்த்திருக்க 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை திருமணமான பெண் ஒருவர் தனது கைப் பையாலும் கற்களாலும் எரிந்து எறிந்து துரத்தியுள்ளார்.
சம்பவத்தைப் பார்த் சிலர் குறித்த நபரை துரத்திப் பிடித்த போது அந்தக் குடும்பப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் பிடிக்கப்பட்டவர் அப் பெண்ணின் கணவர் எனவும் தெரியவந்துள்ளது.
வங்கி ஒன்றில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த நபர் வங்கியில் தனிப்பட்ட விடுமுறை எடுத்து கொழும்புக்கு வந்துள்ளார். தனது மனைவிக்கு வங்கியால் கொழும்பில் நடாத்தப்படும் பயிற்சிக்குச் செல்வதாகத் தெரிவித்தே கொழும்பு வந்ததாகத் தெரியவருகின்றது.
இருந்தும் கணவரில் சந்தேகம் கொண்ட மனைவி வங்கியில் விசாரித்த போது அவர் தனிப்பட்ட லீவில் கொழும்பு சென்றுள்ளதாகத் தெரிவித்துளனர்.
இதனையடுத்து மனைவியும், குடும்பஸ்தரின் தாயுமாக அவருக்கு தெரியாது கொழும்பு வந்துள்ளார்.
குடும்பஸ்தரின் நண்பன் ஊடாக குடும்பஸ்தர் தங்கியிருக்கும் விடுதியை அடைந்து அங்கு அவரைக் கேட்ட போது அவர் அருகில் உள்ள கடற்கரைக்கு தனது மனைவியுடன் சென்றதாகத் தெரிவித்திருந்தனர்.
அக் கடற்கரைக்குச் சென்ற போது ஜோடியாக கணவன் இன்னொரு யுவதியுடன் அமர்ந்திருந்ததை பார்த்து கோபாவேசம் கொண்ட மனைவி கணவனை சமாரியாக எறிந்து கலைத்துள்ளார்.
மனைவி கணவனைக் கவனிக்க குடும்பஸ்தரின் தாயார் குறித்த யுவதியுடன் சண்டையிட்டுக் கொண்டதாகத் தெரியவருகின்றது.
தாயாரின் தாக்குதலைச் சமாளித்து கள்ளக்காதலியான சிங்கள யுவதி ஓடித்தப்பிவிட்டார்.
கணவனை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் கொடுக்க முற்பட்ட போதே குறித்த தகவல்களை மனைவியும் குடும்பஸ்தரின் தாயாரும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
தனது தாயின் சகோதரனின் மகளையே குடும்பஸ்தர் மணமுடித்திருந்ததாகவும் தெரியவருகின்றது.
அச்சம்பவத்தால் வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
குடும்பம் நடத்த ஒத்துகொள்ளாத சிறுமி மீது துப்பாக்கி சூடு
சட்டத்துக்கு முரணான வகையில் 17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞன் குறித்த சிறுமி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21 ஆம் திகதி திங்கட்கிழமை லுணுகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.
மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர் பதினேழு வயது நிரம்பிய யுவதியுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த யுவதி தனது எதிர்காலம் வீணாவதை உணர்ந்த நிலையில் இளைஞனிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்டுள்ளார்.
இதன்போதே குறித்த இளைஞன் யுவதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இளைஞனிடம் இருந்த துப்பாக்கி சட்ட விரோதமானதென்று விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத திருமணம் அனுமதிப் பத்திரமில்லாத துப்பாக்கி வைத்திருந்தமை துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.