பெர்முடா தீவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பெரும் வன்முறையாக மாறியது. இரு அணி வீரர்கள் சரமாரியாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த மோதலை தொடர்ந்து ஒரு வீரருக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டது.

சாம்பியன்  ஒப் சாம்பியன்ஸ்  கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியிலேயே இந்த மோதல் ஏற்பட்டது. இதன்போது இரு அணியினரும், துடுப்புகளாலும் கைகளாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

மைதானமே போர்க்களமாக மாறிப் போனது.

  tkn-09-23-fr-08
செப்டம்பர்  12ஆம் திகதி இந்த மோதல் நடந்தது. இப்போட்டியில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு வீரர்களைத் தாக்கியதாக 36 வயது விக்கெட் காப்பாளர்   ஜேசன் அண்டர்சன் என்பவருக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின்போது ஜேசன் அண்டர்சனுக்கும், எதிர்த் தரப்பு வீரர் ஜோர்ஜ் ஓ பிரையனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
அதுவே மோதலாக மாறியது. மோதலை விலக்க பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
போட்டி முடிவில் மோதலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
மோசமாக நடந்து கொண்டதற்காக அண்டர்சனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பிரையனுக்கும் 6 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

Share.
Leave A Reply