போலீசை பற்றி யார் அநாகரீகமான முறையில் பேசினாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று என்கவுன்ட்டர் புகழ் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை ஓப்பன் மைக்கில் பேசிய பேச்சு வாட்ஸ் அப்பில் உலா வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஏடிஎஸ்பியாக இருப்பவர் வெள்ளத்துரை. வீரப்பன் என்கவுன்ட்டருக்கு பிறகு பிரபலமாக பேசப்பட்டவர்.

இந்நிலையில், காவல்துறையினரை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெள்ளத்துரை தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் ஓப்பன் மைக்கில் பேசியுள்ளார். இது வாட்ஸ் அப்பில் பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதில் “காவல்துறையை பற்றி யார் அநாகரீகமாக பேசினாலும் உள்ளே தள்ளு… இன்னைக்கு காலையில பத்து மணிக்கு பேசினா நாளை காலை பத்து மணிக்கு அவன் ஜெயில்ல இருக்கணும்…!’ என்ற ரீதியில் போகிறது வெள்ளத்துரை பேச்சு!

Share.
Leave A Reply