இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொது­நல­வாய மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், சட்டத்­த­ர­ணிகள் அடங்­கிய உள்­நாட்டு நீதித்­துறை கட்­ட­மைப்­புடன் கூடிய விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி இலங்கை குறித்த அமெ­ரிக்­காவின் திருத்­தப்­பட்ட புதிய பிரேரணை நேற்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அண்­மையில் வெளி­யிட்ட அறிக்­கையின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அமெ­ரிக்க பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ளது.

ஜெனிவா நேரப்­படி

நேற்று 5.15 மணி­ய­ளவில் இலங்கை தொடர்­பான அமெ­ரிக்க பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­ பட்­டது. அந்­த ­வ­கையில் அமெ­ரிக்கா கடந்­த­வாரம்

வெளி­யிட்ட நகல் பிரே­ரணை வரைபில் காணப்­பட்ட பல்­வேறு விட­யங்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­துடன் வரைபில் காணப்­பட்ட 26 பந்­தி­களும் 20 பந்­தி­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்ந்து கண்­கா­ணிக்­கு­மாறு அது தொடர்­பான வாய்­மூல அறிக்­கையை மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கு­மாறும் அது தொடர்­பான பரந்­து­பட்ட அறிக்­கையை 34 ஆவது கூட்டத் தொடரில் முன்­வைக்­கு­மாறும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யையும் அமெ­ரிக்க பிரே­ரணை கோரி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவின் பிரே­ரணை நகல் வரைபு கடந்த சனிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­ட­துடன் கடந்த திங்­கட்­கி­ழமை உறுப்பு நாடு­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கப்­பட்­டது.

அத்­துடன் கடந்த திங்­கட்­கி­ழமை மனித உரிமை பேரவை வளாகத்தில் உப குழுக் கூட்டம் ஒன்றை நடத்­திய அமெ­ரிக்கா இந்த பிரே­ரணை வரைபு தொடர்பில் உறுப்பு நாடு­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­தி­ருந்­தது.

எனினும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த ஜெனி­வா­வுக்­கான இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க அமெ­ரிக்க பிரே­ர­ணையின் நகல் வரை­புக்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­துடன் அதில் உள்ள விடயங்கள் இலங்­கையின் உள்­ளக செயற்­பாட்டில் பாரிய எதிர்­ம­றை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்று கூறி­யி­ருந்தார். .

இத­னை­ய­டுத்து சீனா ரஷ்யா பாகிஸ்தான் உள்­ளிட்ட நாடுகள் இலங்­கைக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­த­துடன் பிரே­ர­ணையை வலு­வி­ழக்க செய்ய முயற்­சித்து வந்­தன.

எனினும் ஐரோப்­பிய நாடுகள் பிரே­ர­ணையை வலு­வி­ழக்கச் செய்­யக்­கூ­டாது என்­ப­தனை வலி­யு­றுத்தி வந்­தன. இந்­நி­லை­யி­லேயே தற்­போது புதிய திருத்­தப்­பட்ட பிரே­ரணை அமெ­ரிக்­கா­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் முன்­னைய பிரே­ரணை வரை­பை­விட புதிய திருத்­தப்­பட்ட பிரே­ர­ணையில் பல விட­யங்­களில் மாற்றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

முன்­னைய வரைபில் காணப்­பட்ட சில பந்­திகள் சுருக்­கப்­பட்­டுள்­ளன. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே 26 பந்­திகள் 20பந்தி­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரே­ர­ணையை அமெ­ரிக்கா மெச­டோ­னியா பிரிட்டன் மொன்­ட­னெக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து சமர்ப்­பித்­துள்­ளன.

அந்­த­வ­கையில் பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 விட­யங்­களும் வரு­மாறு

1.ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைப்­பே­ர­வையின் 27ஆம் அமர்­வு­களில் இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் குற்றச் செயல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­தல்­க­ளையும் ஏற்­ப­டுத்த வேண்­டு­மெனக் கோரி மனித உரிமைப் பேரவை ஆணை­யாளர் ஆற்­றிய உரை மற்றும் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்கை என்­ப­ன­வற்றை கவனம் கொள்கின்றோம்.

அந்­த­வ­கையில் நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 25-1 தீர்­மா­னத்­துக்கு அமைய முன்­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின்றோம்.

2. உண்­மையை கண்­ட­றியும் விட­யத்தில் 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்­கைக்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்­துக்கும் இடை­யி­லான ஈடு­பாடு வர­வேற்­கப்­ப­ட­வேண்­டி­யது.

3. நீதியை அமுல்­ப­டுத்­து­வதில் நம்­ப­கத்­தன்­மையை உறுதி செய்ய இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கப்படும். .

பாதிக்­கப்­பட்­ட­வர்கள், சிவில் சமூகம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரு­டனும் விரி­வான தேசிய கலந்­து­ரை­யா­டல்­களின் ஊடாக இதனைச் செய்ய முடியும்.

சர் வதேச நிபு­ணர்­களின் ஒத்­து­ழைப்­பையும் பெற்­றுக்­கொள்ள முடியும். சாட்­சிகள் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பாது­காக்கும் வலு­வான ஓர் பாது­காப்புப் பொறி­மு­றைமை அவ­சி­ய­மா­னது.

4. நல்­லி­ணக்கம் கடந்­த­கால பிரச்­சி­னைகள் மீள் இடம்­பெ­றாமல் இருத்தல் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உள்­ளிட்ட விட­யங்கள் வர­வேற்­கப்­ப­ட­வேண்­டி­யவை.

பக்­கச்­சார்­பற்ற நேர்­மை­யான விசா­ரணைப் பொறி­மு­றைமை மற்றும் நீதி­மன்றக் கட்­ட­மைப்பின் மூலம் விசாரணைகள் நடத்தி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியாயம் வழங்­கப்­பட வேண்டும்.

இதற்கு சர்­வ­தேச உத­வி­க­ளையும் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் பெறலாம்.

5. ஐ.நா. அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள புலிகள் மேற்­கொண்ட போர்க்­குற்­றங்கள் குறித்தும் கவ­னத்தில் எடுக்­க­வேண்டும்.

6.பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யா­ளர்கள் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் உள்­நாட்டு நீதித்துறை கட்­ட­மைப்­புடன் கூடிய விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

7. சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்­களில் ஈடு­ப­டு­வ­வோ­ருக்கு எதி­ராக தண்டனை விதிக்க உள்­நாட்டு சட்­டங்­களை திருத்தி அமைக்க வேண்டும்.

குறிப்­பாக உள்­நாட்டு சர்­வ­தேச சட்­டங்­களின் அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்கப்பட வேண்டும்.

8. பாது­காப்புத் துறைசார் விவ­கா­ரங்­களில் காத்­தி­ர­மான மாற்­றங்­களை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்கள் உள்­ளிட்ட பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக அடையாளப்­ப­டுத்­தப்­படும் பாது­காப்பு அதி­கா­ரிகள் உயர் பத­வி­களில் அமர்த்­தப்­ப­டக்­கூ­டாது.

குறிப்­பாக தற்­கா­லிக நீதிப் பொறி­மு­றை­மையில் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களை மீறிய படை­ய­தி­கா­ரிகள் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் உள்­ள­டக்­கப்­ப­டக்­கூ­டாது.

9. சாட்­சி­யா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பாது­காக்கும் அர­சாங்­கத்தின் புதிய சட்டத் திருத்தம் வரவேற்­கப்­பட வேண்­டி­யது.

இந்தக் சட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. பாது­காப்பு தரப்­பினர் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள் பாது­காக்­கப்­ப­டக்­கூ­டிய வகையில் சட்­டங்கள் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

10.அர­சாங்­கப்­ப­டை­யி­னரால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நடவடிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

இதற்­காக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கத்­தக்­கன. குறிப்­பாக சிவி­யலின் விவ­கா­ரங்­களில் இராணு­வத்தின் தலை­யீடு முழு­மை­யான அகற்­றிக்­கொள்­ளப்­பட வேண்டும். சிவ­லி­யன்­களின் இயல்பு வாழ்க்­கையை உறுதி செய்ய வேண்டும்

11.ஊட­க­வ­யி­லா­ளர்கள், ஊடக நிறு­வ­னங்கள், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள், சிறு­பான்மை மத இன சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள், பள்­ளி­வா­சல்கள், கோயில்கள், தேவா­ல­யங்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தி உரிய தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டி­ய­துடன் மீளவும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தனை தடுக்க வேண்டும்.

12.பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை மீளாய்வு செய்தல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்பு வர­வேற்­கப்­பட வேண்­டி­யது. சர்­வ­தேச சட்­டங்­களின் அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­யப்­பட முடியும்.

13. பல­வந்த கடத்­தல்கள் தொடர்­பி­லான சர்­வ­தேச பிர­க­ட­னத்தில் கைச்­சாத்­திட அர­சாங்கம் காட்டும் முனைப்பு வர­வேற்­கப்­பட வேண்­டி­யது. காணாமல் போன­வர்கள் தொடர்பில் உற­வி­னர்­க­ளுக்கு சான்­றி­தழ்கள் வழங்­கப்­பட வேண்டும்

14. கடந்த காலத்தில் விசா­ரணை நடத்­தப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தாக இலங்கை அர­சாங்கம் அளித்த வாக்­கு­றுதி வர­வேற்­கப்­பட வேண்­டி­யது.

15. மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட அனைத்து ஆவ­ணங்கள் அறிக்­கை­க­ளையும் பேணிப் பாது­காக்கும் பொறி­மு­றைமை ஒன்றை அர­சாங்கம் உரு­வாக்க வேண்டும். தனியார் அல்­லது பொது நிறு­வ­னங்­க­ளினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கைகள் அனைத்து பேணிப் பாது­காக்­கப்­பட வேண்டும்.

16.அர­சியல் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்கக் கூடிய வகையில் அதி­காரப் பகிர்வு திட்­ட­மொன்றை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும்.

அவ்­வாறு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிப்­பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்­தொ­கை­யி­னரும் மனித உரி­மை­களை அனு­ப­விக்க முடியும். 13ம் திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் உள்­ளிட்ட அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

17.சர்­வ­தேச மனித உரிமை சட்டம் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் என்­பவை மீறப்­ப­டக்­கூ­டாது என இரா­ணுவப் படையின் அனைத்து பிரி­வு­க­ளுக்கும் அறி­வு­றுத்­தப்­ப­ட­வேண்டும்.

அனைத்து வகை­யி­லான பாலியல் வன்­கொ­டு­மைகள் மற்றும் பால் நிலைசார் ஒடுக்­கு­மு­றை­களை இல்லாதொழிக்க இலங்­கையை ஊக்­கப்­ப­டுத்த வேண்டும். பால் நிலை ஒடுக்­கு­முறை சித்­தி­ர­வ­தை­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

18. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலு­வ­லகம், இலங்­கையின் மனித உரிமை நிலை­மை­களை ஆராய்ந்து மதிப்­பீடு செய்ய வேண்டும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் பரிந்­து­ரைகள் அமுல்படுத்­தப்­ப­டு­கின்­றதா என்­பது மதிப்­பீடு செய்­யப்­பட வேண்டும்.

குறிப்­பாக குற்றச் செயல்­க­ளுக்கு பொறுப்பு கூறுதல் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தல் மற்றும் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

இந்த நிலை­மைகள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 32 அமர்­வு­களின் போது வாய்­மொழி மூல அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சமர்ப்­பிக்க வேண்டும்.

பரிந்­து­ரைகள் மனித உரிமை நிலை­மை­களை ஆராய்ந்து மதிப்­பீடு செய்ய வேண்டும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா என்­பது மதிப்­பீடு செய்­யப்­பட வேண்டும்.

குறிப்­பாக குற்றச் செயல்­க­ளுக்கு பொறுப்பு கூறுதல் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தல் மற்றும் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

இந்த நிலை­மைகள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 32 அமர்­வு­களின் போது வாய்­மொழி மூல அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சமர்ப்­பிக்க வேண்டும்.

பரிந்­து­ரைகள் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து 34 அமர்­வு­களில் முழு அளவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­படும்.

19. இலங்கை அரசாங்கம் விசேட ஆணையாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட ஊக்குவிக்கின்றோம். சில பிரதிநிதிகள் நீண்ட காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவேண்டும்.

20. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசேட அறிக்கையாளா்கள் ஆணையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவேண்டும்.

Share.
Leave A Reply