சுக­யீ­ன­முற்­றி­ருந்த தனது தாயைப் பார்ப்­ப­தற்­காக வெலி­கம பிர­தே­சத்­தி­லுள்ள தனது தாயின் வீட்­டுக்குச் சென்ற 18 வய­தான திரு­ம­ண­மான இளம் பெண்ணின் மார்­ப­கத்தைக் கடித்துக் குத­றிய 25 வய­தான ஒரு பிள்­ளையின் தந்தை­யான நபர் ஒரு­வரை வெலி­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்த நபர் அதே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் ஹெரோயின் பழக்­கத்­துக்கு அடி­மை­யா­ன­வ­ரெ­னவும் தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவ தினத்­தன்று பாதிக்­கப்­பட்ட பெண்ணும் அவ­ரது தாயுமே வீட்டில் இருந்­துள்­ளனர்.

இரவு நாய் தொடர்ந்து குரைக்­கவும் தாயும் மகளும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்­துள்­ளனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் மறைந்து நின்ற சந்­தேக நபர் திடீ­ரென பெண்ணின் மீது பாய்ந்து மார்­ப­கத்தை கடித்து குதறியுள்ளார்.

இந்த நப­ரி­ட­மி­ருந்து மகளைக் காப்­பாற்ற தாய் தடி­யொன்றை எடுத்து சந்­தேக நபரைத் தாக்­கி­யுள்ளார்.

சந்­தேக நபர் தப்பிச் செல்ல முயற்­சித்த போது தாயும் மகளும் அய­ல­வர்­க­ளுடன் சேர்ந்து அந்த நபரைத் தாக்கி பிடிக்க முயற்­சித்­த­போதும் அந்த நபர் அவர்­களின் பிடி­யி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

பின்னர் தாயும் மகளும் வெலி­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ததை அடுத்து சந்­தேக நபர் வைத்தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது வெலிகம பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை ; தேயிலைச் செடிகளுக்குள்ளிருந்து சடலம் மீட்பு: ஒருவர் கைது

12306201501050021057877_Rakalai-worker-involved-in-drug-death_SECVPF-222x140எட்டு வய­தான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்டு கொலை­யுண்ட சம்­ப­வ­மொன்று அக்­மீ­மன ஜன­பல என்ற கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக அக்­மீ­மன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அக்­மீ­மன பிர­தேச பாட­சாலை ஒன்றில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் சிறு­மியே கொலை­யுண்­ட­வ­ராவர்.

சிறு­மியின் தாய் தேயிலை தோட்­டத்தில் தொழில் புரி­கின்றார். தந்தை மேசன் தொழில் புரி­கின்றார்.

சம்­பவ தினம் இவ­ரது சகோ­த­ரி­யுடன் பாட­சாலை சென்ற சிறுமி வீடு திரும்­பி­யுள்ளார்.

சகோ­தரி தனியார் வகுப்­பொன்­றுக்குச் சென்ற பின்னர் சிறுமி வீட்டில் தனித்­தி­ருந்­துள்ளார். அதன் போதே அவர் காணாமல் போயுள்ளார்.

தேயிலைத் தோட்­டத்­தி­லி­ருந்து திரும்­பிய தாய் இளைய மகளைக் காணாமல் அங்­கு­மிங்கும் தேடி­யுள்ளார்.

மகளை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போன­தை­ய­டுத்து அக்­மீ­மன பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பின்னர் பொலி­ஸாரும் கிரா­மத்­த­வரும் தேடுதல் நடத்­திய போது சிறு­மியின் சடலம் அரு­கி­லுள்ள தேயிலைச் செடி­க­ளுக்கு மத்­தி­யி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறு­மியின் சட­லத்தில் வெள்ளை உள்­ளாடை அகற்­றப்­பட்டு அதில் இரத்தக் கறை காணப்­பட்­ட­தா­கவும் கழுத்து இறுக்­கப்­பட்ட நிலையில் கயி­றொன்றும் காணப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பொலிஸார் ரொனி என்ற மோப்ப நாயுடன் தேடுதல் நடத்­தி­ய­போது நாய் சிறு­மியின் வீட்­ட­ரு­கே­யுள்ள 27 வயது நபரின் வீட்­டுக்குள் சென்று அவ­ரது கட்­டி­லுக்­க­ருகே நின்­றுள்­ளது. இதை­ய­டுத்து அந்த நபர் கைது செய்­யப்­பட்டார்.
– See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12306#sthash.ENsZw2GW.dpuf

Share.
Leave A Reply