அத்துருகிரிய – கொஸ்கந்தவில பிரதேசத்தில் ஐந்து பேர் மரணத்துக்கு காரணமாக அமைந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதிக்கு, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதித்திரம் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பேருந்து சாரதியையும், பேருந்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், அடுத்த மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
குறுக்கு வீதி ஒன்றில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, பிரதான வீதியில் பிரவேசிக்க முற்பட்ட வேளையில், பேருந்து ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற முறை தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியாழ் உருவாக்கபட்ட வீடியோ உங்கள் பார்வைக்கும்..
முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
அத்துருகிரியவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாய மடைந்துள்ளார்.
தனியார் பஸ் வண்டியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வரே உயிரிழந்தி ருப்பதாக பொலிஸ் பதில் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
விபத்தில் தாய், மகன், மகள் மற்றும் பேத்தி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பியசீலி (தாய் – 60), நிமல்சிறிசில்வா (மகன் – 36) புஷ்ப்பா சாந்தினி சில்வா (35) செனித்தி பபசரா (புஷ்ப்பா சாந்தினியின் மகள் -08) என பொலிஸாரினால் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று அதிகாலை சரியாக 5-10 மணிக்கு இடம்பெற் றுள்ளது.
அத்துருகிரிய – மாலம்பே பிரதான வீதியில் மாலம்பேவிலிருந்து அத்துருகிரிய நோக்கி வந்த தனியார் பஸ்வண்டியும் அத்துருகிரிய குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிநோக்கி வந்த முச்சக்கர வண்டியுமே கொஸ்கதவில சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத் துக்குள்ளாகின.
முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பஸ் சாரதியைக் கைது செய்துள்ள அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.