தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அதன் பிரதான சந்தேக நபரான சரண் எனப்படுபவரை கைது செய்வதற்காக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தில் உதவி பெற்றுக்கொள்ள தீர்மானித் துள்ளனர்.
சரண் எனப்படுபவர் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய ஆதரவாளர் என்பதோடு அவர் இதுவரையில் சுவிட்சர்லாந்திற்கு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரவிராஜ் கொலை தொடர்பில் இதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் கடற்படை படையினர் மூவரும் உள்ளடக்கப்படுவார்கள்.
சந்தேக நபர்களின் வாக்கு மூலத்திற்கமைய ரவி ராஜை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடித்த குற்றப் புலனாய்வு பிரிவு, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர், கொலையாளியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்த விதம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் கொலையாளியை அழைத்து சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தொடர்பில் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி வருகின்றது.