யாழ்.வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 இந்தியர்கள் உள்ளடங்கிய 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் இந்த கைது இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் தேர்த் திருவிழா முடிந்து குறித்த கொள்ளை கும்பல் வாகனத்தில் பயணிக்கவிருந்த நிலையில் 20 பொலிஸார் கொண்ட விசேட குழு இந்த கைதை செய்துள்ளது.

இதன்போது கொள்ளை கும்பலிடமிருந்து ஹயஸ் வாகனம் ஒன்றும் 27 சங்கிலிகளும் மீட்கப்பட்டது. இவற்றில் 7 சங்கிலிகள் போலியானவை. மிகுதி 20 தங்க சங்கிலிகளின் மொத்த நிறை 60 பவுண்கள் என தெரிவித்திருக்கும் பொலிஸார்,

கைதானவர்களில் 3 இந்தியர்கள் உள்ளதாகவும் இவர்கள் கணவன், மனைவி, மருமகள் என்ற உறவுக்காரர்கள் எனவும் மற்றயவர்கள் 4 பேர் நீர்கொழும்பு மற்றும் அலவத்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி ருவான் பி.நந்தநாராயண தெரிவித்தார்.

மேலும் மேலும் இந்த கொள்ளையர்கள் பக்தர்களை கீழே தள்ளிவிட்டு ஆபரணங்களை களவாடியுள்ளனர்.

இந்த கொள்ளை கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் பெண் உறுப்புக்குள் 3 சங்கிலிகளை மறைத்து வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார்,

கடந்த காலத்தில் நகை கொள்ளையர்களை பிடித்தால் அவர்களிடம் நகைகள் இருப்பதில்லை காரணம் அவர்கள் நகைகளை கைமாற்றி விடுகிறார்கள்.

இதனால் இம்முறை அவதானித்துக் கொண்டிருந்து கொள்ளையார்கள் அனைவரும் இணைந்து வாகனத்தில் புறப்படவிருந்த நிலையில் 20 பொலிஸார் கொண்ட குழு கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

jaffna_robry_010jaffna_robry_003jaffna_robry_003jaffna_robry_007jaffna_robry_008

Share.
Leave A Reply