77 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் இடம் பெயர்வு மண் சரிவில் இறந்த 7 பேரும் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள்
1970, 1978 காலப்பகுதியிலும் இப் பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு 04 வீடுகள் கொண்ட வீட்டு தொகுதி ஒன்றும் அகறப்பட்டுள்ளது
உடனடியாக 17 வீடுகள் அமைக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை
24.09.2015 அன்று பெய்த கடும் மலைக் காரணமாக நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வெதமுல்ல தோட்ட லில்லிஸ்லாண்ட் (கயிர்கட்டி) பிரிவில் கடும் மழைக் காரணமாக பாரிய மண் சரிவு ஏற்பட்டு 07 பேர் மரணமானார்கள். இவர்களில் 04 பேர் சிறுவர்காளவர். இந்த 07 பேரும் இரண்டு குடும்பங்களை சார்ந்த உரவினர்கள்.
இதில் 05 பேர் ஒரே குடுபத்தை சேர்ந்த உரவினர்கள். இவர்களில் அம்மா லெட்சுமி (வயது 67) இவருடைய மகள் யோகநாயகி (வயது 48) யோகநாயகியின் மருமகள் காந்திமதி (வயது 23) காந்திமதியின் பிள்ளை ரூபினி (வயது 02) லெட்சுயின் தங்கையின் மகனின் பிள்ளை ச.சுபானி (வயது 09) இவரின் தாய் தந்தையர்; திருமதி சண்முகநாதன் முத்துமனி ஆவர்.
ஏனைய இரு சிறுவர்களும் வேறு ஒரு குடுபத்தை சேர்ந்தவர்கள். திரு திருமதி ஞானசேகரன் திருநிறைச்செல்வி ஆகிய இருவருக்கும் மூன்று பிள்ளைகள்.
அவர்களின் பிள்ளைகளில் இருவரான ஜீ.மனோஜ் (வயது 04), ஜீ.புவனா (வயது 06) ஆகியோர் கோர மண்சரிவில் இறந்துள்ளனர்.
தாயார் திருமதி திருநிறைச்செல்வி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார் அப்பா ஞானசேகரன் நாளாந்தம் கூலி வேலை செய்பவர்
மேலும் இரு கால்கள் உடைவடைந்த நிலையில் செல்லையா கணேசன் வயது (55) என்பவர் கண்டி வைத்தியசாலையில் கிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த மணசரிவினால் 04 குடியிப்புக்கள் கொண்ட வீட்டு தொகுதி ஒன்றும் தற்காலிக வீடுகள் 05 மாக 09 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி 07 வீடுகள் முற்றாக பாதிப்படைதுள்ளது. இதனால் 30 பேர் பாதிப்டைந்து இடம் பெயர்ந்து இறம்பொடை இந்து கல்லூரியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
மேலும் மண்சரிவு அபாயம் காரணமாக 47 குடும்பங்களை சேர்ந்த 206 பேர் இதே பாடசாலைக்கு இடம் பெயர்ந்து மொத்தமாக பெரியோர் சிறுவர் அடங்களாக 236 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணர்த்தம் நிகழ்ந்தவுடன் தோட்ட இளைஞர்களின் பூரண ஓத்துழைப்புடன் இரானுவத்தின் பங்களிப்புடன் மீட்பு பணிகள் மேற்க் கொள்ளப்பட்டது. இதன் போது 25.09.2015 இரவு 06 சடலங்களும் 26.09.2015. ஒரு சடலமும் மீட்க்கப்பட்டது.
மாலை பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய அதார வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு; பின் உறவினர்களிடம் பிரேதங்கள் 27.09.2015 அன்று கையளிக்பட்டது பின் பிரேதங்கள் பல்லாயிரகணக்கான தோட்ட மக்களின் கண்ணீர் அஞ்சலியின் பின்னர் 27.09.2015 2.00 மணிக்கு மாலை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் 1970. 1978 ஆம் அண்டு காலப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 04 வீடுகளை கொண்ட ஒரு வீட்டுத் தொகுதி முற்றாக அகற்றப்டடுள்ளது.
அக்காலப்பகுதியிலே இந்ந வீடுகளும் அகற்றப்பட்டடிருந்தால் அல்லது இந்த வீடுகளை பாதுகாக்க மாற்று நடவடிக்ககைகள் எடுத்திருந்தால் இவ்வாறான மனித இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருந்திருந்திருக்காது.
ஏவ்வாராயினும் மக்களுக்கான நிவாரன பணிகளை கொத்மலை பிரதேச காரியாளயத்துடன் இணைந்து நுவரெலியா அனர்த்த முகாமைக்குவ பிரிவினர் மேற்க் கொண்டு வந்ததுடன் தோட்ட முகாமைத்துவம், பிரதேச தோட்ட மக்கள் நலன் விரும்பிகளும் முன்னெடுத்து வந்தனர். கொத்மலை பொலிஸாரின் பூரண ஒத்துழைப்பும் கிடைக்கபெற்றது.
இந்த அனர்த்தம் இடம்பெற்றவுடன் மக்கள் பிரதிநிதிகள் இவ்விடத்திற்கு விரைந்தனர். அவர்களில் மலையக புதிய கிராம, உட்கட்டடைப்பு வகதிகள் மற்றம் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் இ.தொ.கா. பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர்களான இராதாகிருஷ்ணன் ராஜாராம், சோ.சிறிதரன், சதாசிவம், ஏ.சக்திவேல், பிலிப்குமார், எம்.ரமேஸ், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமனி மற்றும் பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.
இதன் போது கருத்து தெரிவித்த மலையக புதிய கிராம, உட்கட்டடைப்பு வகதிகள் மற்றம் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு இந்த மக்களின் தற்காலிக குடியிப்பும் உலர் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்ககை எடுத்துள்ளதாகவும்.
பாதிக்கப்பட்ட 09 குடும்பங்களுக்கும் மேலும் 08 அணர்த்த அபாயம் உள்ள வீடுகள் அடங்களாக 17 வீடுகளை 12 இலட்ச ரூபாh செலவில் இலவசமாக உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்ககை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அதன் படி அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உடனடியாக எதிர்வரும் நாட்களில் வேலைத்திட்டம் ஆரபிக்கப்படும் என்று கூறினார்.