ஹைதராபாத்: ஏன் அயிட்டம் பாடல்களில் தொடர்ந்து ஆடுகிறீர்கள்? என்று கேட்ட தெலுங்கு நிருபரை நடிகை பிரியாமணி ஓங்கி கன்னத்தில் அறைந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகில் மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் உள்ளம் என்னும் படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை பிரியாமணி, இயக்குநர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார்.
நடிகர் கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த பருத்திவீரன் திரைப்படம் பிரியாமணிக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரியாமணிக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் எதுவும் இல்லை.
இதனால் கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு செய்தியாளர் பிரியாமணியிடம் ஏன் ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப் பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா?
எனக் கேட்க இதில் எரிச்சல் அடைந்த பிரியாமணி அவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீண்ட ஆள் இல்லையா?’ – ப்ரியாமணிக்கு வந்த நிலைமையைப் பாருங்க!
‘என்ன ஒத்தைப் பாட்டுக்கு இறங்கி வந்துட்டீங்க… சீண்ட ஆளில்லையா?’ – ஒரு பிரஸ் மீட்டில் ப்ரியாமணியைப் பார்த்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி இது. இந்தக் கேள்வியால் நிலைகுலைந்த ப்ரியாமணி கட்டுப்பாட்டை இழந்து நிருபரை அடிக்கப் பாய்ந்து, பின் மன்னிப்புக் கேட்டது தனிக்கதை.
ஆனால் ஏன் ப்ரியாமணிக்கு இப்படி ஒரு நிலை வந்தது? பருத்தி வீரனின் முத்தழகு கேரக்டர்தான் ப்ரியாமணிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு அந்த மாதிரி கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வந்தன. கண்ணை மூடிக் கொண்டு அத்தனைப் படங்களையும் வேண்டாம் என்றவர், கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தார்.
சில ஆண்டுகள்தான்… தமிழ் சினிமா ப்ரியாமணியைக் கண்டுகொள்ளவே இல்லை. தெலுங்கில் மேக்ஸிமம் கவர்ச்சி காட்டப் போவதாகக் கூறி சில படங்கள் நடித்தார். டோலிவுட்டுக்கு அம்மணி போரடித்திவிட அங்கும் படங்கள் இல்லை. மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன்.. இனி இந்தி வாய்ப்புகள் குவியும் பாருங்கள் என்றார். ஆனால் ராவணன் கவிழ்த்ததில் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்த மாதிரி ஆகிவிட்டது.
ப்ரியாமணிக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ள நேரத்தில், மீண்டும் சினிமா வாய்ப்புக்காக தனது ஆல்பங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
தெலுங்கில் பன்னி (Bunny) என்ற படத்தில் ஒரு குத்துப்பாட்டு ஆட்டம் போட்டுள்ளாராம். இதுதான் தலைப்பில் நீங்கள் படித்த கேள்விக்குக் காரணம்!
Post Views: 41