சவூதி அரே­பி­யாவின் மினா நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை காலை ஏற்­பட்ட சன­நெ­ரி­சலில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எவரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் விபத்து நடந்த தினத்திலிருந்து தொடர்ந்தும் இலங்­கையைச் சேர்ந்த தம்­ப­தி­யினர் இருவர் காணாமற் போயுள்­ள­தாக இலங்கை ஹஜ் முகவர் ஒருவர் சவூ­தி­யி­லுள்ள இலங்கை ஹஜ் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

ஹஜ் கட­மையை மேற்­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச் ஏ. ஹலீம், முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.எச்.எம். ஸமீல், ஹஜ் குழு உறுப்­பினர் எம்.பாஹிம் ஆகியோர் விபத்தில் காய­ம­டைந்­த­வர்கள் சிகிச்சை பெற்­று­வரும் வைத்­தி­ய­சா­லைக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு வரு­வ­தாக ஹஜ் குழு உறுப்­பினர் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி தெரி­வித்தார்.

இது­வரை 9 வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு அவர்கள் நேர­டி­யாக விஜ­யத்­தினை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் சனநெரிசல் கார­ண­மாக சில வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு பல மைல்கள் கால்­ந­டை­யாகச் சென்று சிகிச்சை பெற்றுவரும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் சுக­ந­லன்­களை விசா­ரித்து வரு­வ­தா­கவும் அவர் கூறினார்.

காணாமற் போயுள்ள தம்­ப­தி­க­ளான இலங்கை ஹஜ் யாத்­தி­ரிகர் இரு­வரும் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கி­றார்­களா எனக் கண்­ட­றி­வ­தற்கு 19 வைத்தியசா­லை­க­ளுக்கு நேரடி விஜயம் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

இலங்­கையைச் சேர்ந்த எவரும் விபத்தில் உயி­ரி­ழக்­க­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தாக அமைச்சர் ஹலீம் தெரி­வித்­துள்ளார்.

அதனால் இலங்­கை­யி­லுள்ள உறவினர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் வைத்தியர் குழுவும் 24 மணிநேர சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply