நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.

வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார்.

சிப்பாயின் அடையாள அட்டை வீட்டு வளாகத்தில் வீழ்ந்து கண்டுடெடுக்கப்பட்டு, அதனடிப்படையில் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிப்பாயை பொலிஸார் கைது  செய்தனர்.

தான் சென்ற வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் பெண் தன்னை அழைத்ததாகவும் தான் வீடு மாறிச் சென்றதாகவும் குறித்த சிப்பாய் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்தார்.

சிப்பாயை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) ஆஜர்செய்த போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

நீதிபதி இளஞ்செழியனுக்கும் சுன்னாகம் பொலிசாருக்கும் சவால் விடும் ரவுடிகள்!!
 thaali_kollai

சுன்னாகம் பொலிசாருக்கும் நீதிமன்றத்திற்கும் சவால்விடும் வகையில் ரவுடிகளின் அடவாடித்தனங்கள் சுன்னாகம் பொலிஸ் பகுதியில் அமைந்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கிய நிலையில் நீதிமன்றத்தினால் விசேட அதிரடிப் பொலிசாரையும் பயன்படுத்தி ரவுடிகளின் அட்டகாசத்தை நிறுத்தும் படி பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் வாள்வெட்டுக்கள் அடிபிடிகளை நிறுத்தியவர்கள் தற்போது வழிப்பறியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.

சுன்னாகம் பொலிசார் நீதிமன்றத்திறக்கு குற்றச் செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக வெள்ளிக்கிழமை பகல் அறிக்கை சமர்ப்பித்த சில மணி நேரத்திலேயே மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்களினால் சுமார் ஏழரை லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளன.

சுன்னாகம் தெற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் ஒரு தாலிக்கொடியுமம் சங்கிலியும் மற்றும் கந்தரோடை கற்பொக்கணைப் பகுதியில் ஒரு தாலிக்கொடி மற்றும் உடுவில் கீழிச்சந்தைப் பகுதியில் ஒரு சங்கிலியென பிற்பகல் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையில் அறுத்து செல்லப்பட்டுள்ளது.

இதே போன்று வெள்ளிக்கிழமை இரவு ஏழாலைப் பகுதயில் இரண்டு ஆடுகள் திருடப்பட்டுள்ளன. இவைகள் யாவும் சுனனாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளன.

இந்தளவுக்கு ரவுடிகள் பொலிசாரின ரோந்து நடவடிக்கைகள் கண்காணிப்புக்கள் நீதிமன்றப் பணிப்புரைக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தும் துணிந்து இத்தகைய நடவடிக்கைககளை மேற்க்கொள்வது பொலிசாருக்கும் நீதிமன்றத்திறகும் சாவல் விடும் ஒரு நடவடிக்கையாக பொது மக்கள் கருதுகின்றார்கள்.

Share.
Leave A Reply