சிலிக்கான்வேலி: வீடியோ, போட்டோ பிரியரான பிரதமர் நரேந்திரமோடி, உலகில் பலருக்கும் பப்ளிசிட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் தலைவர் மார்க் சகர்பர்க்கின் கையை பிடித்து இழுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த வீடியோ, வைரலாக பரவி வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவின் சிலிக்கான்வேலியிலுள்ள பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்று பேஸ்புக் தலைவர் மார்க் சகர்பர்க்கை சந்தித்தார். டவுன்ஹாலில் சகர்பர்க் உடன் அமர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.

29-1443512591-modi-pulls-zuckerberg-to-face-the-cameras-video-goes-viral2-600

சந்திப்பு

முன்னதாக, சகர்பர்க் மற்றும் பேஸ்புக் சி.ஓ.ஓ ஷெரில் சன்ட்பெர்க் ஆகியோரை பேஸ்புக் அலுவலகத்திற்குள் சந்தித்து பேசினார். அப்போது, பத்திரிகை போட்டோகிராபர்களும், வீடியோமேன்களும் அதை படமாக்கினர்.

29-1443512582-modi-pulls-zuckerberg-to-face-the-cameras-video-goes-viral4-600

கையை இழுத்த மோடி
அப்போது காமிராவை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தார் மார்க் சகர்பர்க். ஆனால் மோடியோ, மார்க்கின் கையை பிடித்து இழுத்து தன்பக்கம் நிறுத்தினார். இதன்மூலம், மூவரின் உருவங்களும் தெளிவாக போட்டோக்களில் பதிவாகின.

வைரலாகும் வீடியோ

திடீரென்ற இந்த நடவடிக்கையால் மார்க் சற்று பதற்றமடைந்துவிட்டார். என்றுமே மோடி ஒரு பப்ளிசிட்டி பிரியர்தான் என்று கூறி, இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

29-1443512570-modi-pulls-zuckerberg-to-face-the-cameras-video-goes-viral5-600

பப்ளிகுட்டி மோடி
எப்போதுமே பப்ளிசிட்டி பிரியராக அறியப்படுபவர். அவரது செல்ஃபிகள் உலக பிரசித்தி. ஆனால் உலகத்தின் பல மக்களுக்கு பப்ளிசிட்டியை கொடுக்கும் பேஸ்புக் அதிபரையே பப்ளிசிட்டிக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து மோடி கையை பிடித்து இழுத்தது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply