அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் மஸ்கெலியா பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திலுள்ள தமிழ் பாடசாலையில் மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக என்ற குற்றச்சாட்டில் அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று செவ்வாய்க்கிழமை அவரை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர்.

மொட்டிங்ஹேம் தோட்டத்திலுள்ள தமிழ் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்விபயிலும் 4 மாணவிகளை குறித்த ஆசிரியர் தனியார் வகுப்பு என்ற போர்வையில் பல முறை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 4 மாணவிகளும் பெற்றோர் ஊடாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபரான ஆசிரியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

மேற்படி 4 மாணவிகளையும் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனமற்றிருந்த பாடசாலை அதிபர், உப அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பெற்றோரும், பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Still0929_00001Still0929_00000DSC00769

DSC00779

Share.
Leave A Reply