நாம் நன்றாக தான் உறங்கி கொண்டிருப்போம், ஆனால் திடீரென அடித்து பிடித்து எழுந்து உட்காருவோம். நம்மை யாரும் எழுப்பியிருக்க மாட்டார்கள், வீட்டில் எந்த சப்தமும் எழுந்திருக்காது, எந்த ஒரு இடையூறும் இன்றி இவ்வாறு சில சமயம் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நடப்பது உண்டு.
ஏன் இவ்வாறு நடக்கிறது? எதனால் இவ்வாறு நடக்கிறது? இது ஏதேனும் உடல்நலன் சார்ந்த பிரச்சனையா? என்ற பல கேள்விகள் எழலாம்.
ஏனெனில், சிலருக்கு இதுப் போன்று அடிக்கடி ஏற்படும். இதற்கான தீர்வை ஓர் ஆய்வின் மூலம் கண்டரிந்துவிட்டார் லண்டனை சேர்ந்த பேராசிரியர் கேபி பத்ரி என்பவர்.
தசைகளில் ஏற்படும் முடக்கம்
நாம் நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நமது தசைகளில் முடக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
தூக்கத்தில் இருக்கும் பல்வேறு கட்டங்கள்
நாம் நமது தூக்கத்தில் பல்வேறு கட்டங்களை கடக்கிறோம். தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு நிலை என உறக்கத்தில் சில கட்டங்கள் இருக்கின்றன என லண்டனை சேர்ந்த பேராசிரியர் கேபி பத்ரி என்பவர் கூறுகிறார்.

45 – 60 நிமிடங்கள்
பொதுவாக உங்களது உறக்கம் சாதாரண நிலையில் இருந்து ஆழ்ந்த நிலைக்கு செல்ல 45 – 60 நிமிடங்கள் ஆகிறது.

ஆர்.இ.எம் சுழற்சி (Rapid Eye Movement)
நாம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தான் ஆர்.இ.எம் எனப்படும் “Rapid Eye Movement” செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் தான் நமக்கு கனவு வருகிறது. மற்றும் இந்த நிலையில் நமது தசைகள் முடக்க நிலைக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

இடையூறு ஏற்படும் போது
அழுத்தம், சோர்வு அல்லது உங்களது ஒழுங்கற்ற உறங்கும் நிலை இந்த ஆர்.இ.எம் எனும் சுழற்சிக்கு இடையூறாக அமையலாம். இந்த இடையூறுகள் உங்களை ஆழ்ந்த உறக்கத்திற்கு, உடல் அதற்கு தயாராகும் முன்னரே சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட வேகமாக எடுத்து செல்லும்.

கனவுகள்
இதனால் உங்களுக்கு தெளிவான, தத்ரூபமான கனவுகள் எல்லாம் வரலாம். ஆனால், அழுத்தம், சோர்வு போன்ற காரணத்தினால் உங்கள் தசைகள் ரிலாக்ஸாக இருக்காது. அப்போது ஏற்படும் திடீர் ஜெர்கினால் தான் உறக்கத்தில் இருந்து திடீர் விழிப்பு ஏற்படுகிறது. இதை தான் “Hypnic Myoclonia” என்று குறிப்பிடுகிறார்கள்.
பொது மக்களின் அச்சம்
கடினமாக உழைக்கும் சிலருக்கு இது அடிக்கடி கூட ஏற்படலாம். இதற்காக அச்சம் கொள்ள தேவையில்லை என இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் கேபி பத்ரி (Gaby Badre) கூறியுள்ளார். உடல் சோர்வு அல்லது அழுத்தம் அதிகரிக்கும் போது இவ்வாறு நடப்பது சாதாரணம் என்று இவர் கூறுகிறார்.