இரத்­தி­ன­புரி, காவத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொட்­ட­கெத்­தன மேற்­பி­ரிவு ஓபாத பிர­தே­சத்தில் இரண்டு பிள்­ளை­களின் தாயொ­ருவர் கூரிய ஆயு­தங்­களால் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பிலானபொலிஸ் விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை யில் இங்கு 5 பொலிஸ் விசா­ரணைக் குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த பெண்­ணுடன் இதே பிர­தே­சத்தில் 17 பேர் இது­வ­ரையில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இவர்­களில் இரு தமிழ்ப் பெண்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மேற்­படி சம்­ப­வத்தில் 48 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தாயான நாதன் பாப்பு என அறி­யப்­படும் பெண்ணே இவ்­வாறு வெட்டிப் படு­கொலைச் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ரது சடலம் மீட்­கப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை சட்ட வைத்­திய அதி­கா­ரி­களும் தமது விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் கீழ் மனிதப் படு­கொலை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் விசேட குழு­வொன்றும், இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் பாலித சிறி­வர்­த­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் நான்கு பொலிஸ் குழுக்­களும் இணைந்து மேற்­படி படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளன.

நேற்­று­முன்­தினம் திங்­கட்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் கொட்­ட­கெத்­தன மேற்­பி­ரிவு ஓபாத பிர­தே­சத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்­துக்­கொண்­டி­ருந்தபோது நாதன் பாப்பு திடீ­ரென காணாமல்­போ­யுள்ளார்.

இவரை தேடும் பணியில் உற­வி­னர்கள் ஈடு­பட்­டி­ருந்­த­போது தேயிலைத் தோட்­டத்தின் திறந்­த­வெளிப் பகுதி ஒன்றில் பாப்பு கழுத்து வெட்­டப்பட்ட நிலையில் இரத்தம் சிந்தி சட­ல­மாக கிடக்கக் கண்­டுள்­ளனர்.

கடந்த 8 மாதங்­க­ளுக்கு முன்னர் வீட் டில் தனி­மையில் இருந்த மூன்று பிள்­ளை­களின் தாய் (42 வயது) ஒருவர் கொலை செய்­யப்­பட்­டு ஓடை ஒன்­றுக்குள் வீசப்­பட்­டி­ருந்தார்.

எனினும் அவர் அவ­ரது மகனால் கொல்­லப்­பட்டார் என்­பதை கண்­ட­றிந்த பொலிஸார் மகனைக் கைது செய்­தனர். அவர் தற்­போது வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந் நிலை­யி­லேயே மற்­றொரு பெண் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இதன்­படி கொட்­ட­கெத்­தன பிர­தே­சத்தில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இது­வரை தொடர்ச்­சி­யாக கொலை செய்­யப்­பட்ட பெண்­களின் எண்­ணிக்கை 17 ஆக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

பாப்பு என்ற பெண்­ம­ணி­யுடன் இதே­பி­ர­தே­சத்தில் இரு தமிழ் பெண்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும் இந்த விடயம் தொடர் பில் நேற்று மாலை­வரை எவரும் கைது செய்­யப்­ப­டாத நிலையில் பலரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த பெண் கொழுந்து பறித்த பின்னர் வீடு செல்லும் வேளையில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் சுமார் 100 மீற்றர்களுக்கு நீண்டு செல்லும் இரத்தக் கறைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply