ஆணுறையை திருடி காதலருடன் உல்லாசமாக இருந்த மகளை, தந்தை கொலை செய்த சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய லரீப் என்ற மகளை 51 வயதுடைய அஷதுல்லாஹ் கான் என்பவேர கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட அஷதுல்லாஹ் கான் (வயது 51) இவரது மனைவி ஷாசியா (வயது 41) ஆகிய இருவரும் ஜேர்மனியில் உள்ள டார்ம்ஸ்டேட் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளதோடு தனது மூத்த மகளை பாகிஸ்தானில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஜேர்மனியில் லரீப் ( வயது 19 ) மற்றும் நாடியா ஆகிய இருவரும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.
19 வயதுடைய லரீப் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை பெற்றொர்கள் பலமுறை கண்டித்துள்ளனர்.
எனினும் அவர் அதனை பொருட்படுத்தாது தனது காதலை தொடர்ந்து பேணிவந்துள்ளார். மேலும் தனது காதலருடன் உல்லாசமாக இருப்பதற்கு கடைகளில் ஆணுறைகளை திருடியுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸார் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து கோபமடைந்த பெற்றோர் மகளை கௌரவ கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் குறித்த தம்பதியினரை கைது செய்து ஜேர்மனியில் உள்ள நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது தாம் செய்த குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.
தனது குடும்பத்திற்கு விருப்பமில்லாத நபர் ஒருவருடன் காதல் தொடர்பை வைத்திருந்தாலும் அவர் கடைகளில் ஆணுறைகளை திருடி காதலனுடன் உல்லாசமாக இருந்தமையாலும் தனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமையாலுமே தனது மகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.