நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் புலி திரைப்படத்துடன் தொடர்புடையவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் இன்று காலை இந்திய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.விஜய் நடித்த 100 கோடி இந்திய ரூபா செலவில் தயாரான புலி திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இச்சோதனை நடைபெற்றமை தமிழத் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு மட்டுமன்றி, ‘புலி’ படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

மதுரையில், சினிமா தயாரிப்புக்கு நிதி அளிக்கும் அன்பு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

‘புலி’ படத்துக்கு அதிகமாக ஃபைனான்ஸ் அளித்தவர் அவர் தான் என்கிறது கொலிவூட் வட்டாரம்.

மேலும், விஜய் அடுத்ததாக நடித்து வரும் இயக்குநர் அட்லீ படத்தின் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அப்படத்தில் விஜய் நாயகியாக நடித்துவரும் சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடந்தது.

12410_Untitled-1விஜய் படங்களின் தயாரிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வீடு மற்றும் அலுவலகங்கள் என 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.

மேலும், இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாராவின் கொச்சியில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நயன்தாரா அவ்வப்போது காதல் விவகாரங்களில் சிக்கி வந்துள்ளார்.

இருப்பினும் அவரது திரை உலக வாழ்க்கையில் எந்தவித சரிவும் ஏற்படவில்லை.

தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா பல கோடிகளை சம்பளமாக வாங்குகிறார்.

இதைத்தொடர்ந்தே இவரது வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடந்தது. சென்னை போட் கிளப், குரோம்பேட்டையில் உள்ள சமந்தா வீடுகளில் ஒரே சமயத்தில் சோதனை நடந்தது.

நயன்தாராவைப் போலவே சமந்தாவும் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகை ஆவார்.

இதன் காரணமாகவே அவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

Share.
Leave A Reply