இலங்கை அரசாங்கத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் பதவியேற்ற பின்னர் இன்று வியாழக்கிழமை முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த எதிர் கட்சித் தலைவர் இரா .சம்பந்தன் முற்றவெளியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது எதிர்க் கட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

தந்தை எதனைக் கூறினாரோ அதனை உரிய முறையில் அரசாங்கம் வழங்குமாக இருந்தால் அந்த தீர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவன் , வட மாகாண சபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் , உறுப்பினர் எஸ். பரம்சோதி , யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி, நிர்வாக செயலாளர், எக்ஸ். குலநாயகம் மற்றும் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் த.நடனேந்திரன், சிக்கனகடனுதவு கூட்டுறவுச்சங்கதத்தின் தலைவர் சி. இலகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

samsdf (2)sfs)sf)

Share.
Leave A Reply