ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9-வது மாடியில் இருந்து தொங்குவதை செல்பி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்ற மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்த மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த மாணவர் பல்வேறு உயிர் ஆபாத்தான சூழ்நிலைகளில் எடுத்த செல்பி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டு உள்ளார்.
அதேபோன்று இந்தமுறையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடுவதற்கு செல்பி எடுக்க முயன்ற மாணவனுக்கு மரணம்தான் காத்திருந்துள்ளது.
ரஷ்யாவில் இந்த ஆண்டு மட்டும் செல்பி எடுக்க முயற்சித்த 12 பேர் பலியாகி உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.