லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள சமூகக் கல்லூரியில் இளைஞன் ஒருவன் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லூரி ஒன்றில்  10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை, ஒரு வகையில் பார்த்தால், இந்த வருடத்தில் அமெரிக்காவில் நடந்த இருநூற்று தொண்ணூற்று நான்காவது ஒட்டுமொத்த துப்பாக்கி சூடு.
அமெரிக்காவில் அண்மைக்காலமாக திரையரங்குகள், கல்விக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் ஒரேகான் மாகாணத்தில் உம்குவா சமூகக் கல்லூரிக்குள் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய இளைஞன் திடீரென உள்ளே நுழைந்தான்.
Screen-Shot-2015-10-01-at-5.06.09-PM-800x449அவன் கண்மூடித்தனமாக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டான். இதில் மாணவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அக் கல்லூரி உடனடியாக மூடப்பட்டது.

Share.
Leave A Reply