மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

விபச்சாரம், கலாசார சீரழிவு, கள்ளத்தொடர்பு இவைகளுடன் அசாத்சாலி தொடர்பு பட்டுள்ளதாகவும், அதனை கண்டித்துமே குறித்த ஆர்பபாட்டம் இடம்பெறுவதாகவும் துண்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதுடன் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முஸ்லிம்களை பௌத்தரிடம் காட்டிக் கொடுக்காதே, முஸ்லிம் – சிங்கள உறவை சீர் குழைக்காதே, இஸ்லாத்தை கேவலப்படுத்தாதே, போலி அரசியல் செய்யாதே, குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே, போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில மொழியிலான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

1860143898Asath

Share.
Leave A Reply