கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் குடும்பஸ்தரை மினுவாங்கொட பிரதான நீதவான் டி.ஏ ருவன் பத்திரன நேற்று விடுதலை செய்தார்.
குறித்த இரண்டு பேரின் மரபணு அறிக்கையும், சிறுமியின் மரபணு அறிக்கையும் பொருந்தவில்லை என நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விடுதலையான சிறுவ ன் இச்சம்பவம் , மற்றும் தன்னுடைய எதிர்காலம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
தன்னை கைதுசெய்த முதல்நாள் பொலிஸார் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்கமுடியாது என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறைச்சாலை அதிகாரிகள் யாரும் தன்னை தாக்கவில்லையெனயும், பொலிசார் நானகைந்து பேர் தொடர்ச்சியாக அடித்தார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் பாடசாலைக்கு செல்லும் எண்ணமும் இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.