யுவதியொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளியொன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை வெளியாகியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இத்தகவலை எமக்கு வழங்கியது.
இதன்படி காணொளியில் தாக்குதலுக்குள்ளாகிய யுவதி மற்றும் தாக்கும் இளைஞன் மற்றும் சிலர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வந்துள்ளனர்.
அவர்களின் தகவலின்படி இச்சம்பவமானது 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி மாலை 1 மணியளவில் கட்டுநாயக்க , மாதுவ பிரதேசத்தில் , மாதுவ கங்கைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் அவர் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவ்விளைஞர் அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் இருவரும் காதலர்கள் எனவும் விரைவில் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தை அவர்களின் நண்பர்களில் ஒருவரே படம்பிடித்துள்ளார்.
அண்மையில் அவர் அவரது கையடக்கத்தொலைபேசியை திருத்துவதற்காக கடையொன்றுக்கு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்த ஒருவராலேயே இக்காணொளி வெளியாகியிருக்கக்கூடுமெனவும் அவர்களில் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.
பெண் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் இவர்களை தெரியுமா? – வீடியோ
இரண்டு இளைஞர்கள் சேர்ந்து மனிதாபிமானமற்ற முறையில் மற்றுமொரு யுவதி மீது தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகளுடன் இணையத்தில் பரவும் வீடியோ தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் வாக்குமூலம் வாங்கவேண்டிய தேவை உள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீடியோ தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 011 2727227 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொதுமக்களிடம், பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட வீடியோ முன்னணி முகநூல் பக்கங்களிலும், சிங்கள மொழி இணையங்களிலும் பதிவு செய்யபட்டுள்ள அதேவேளை தாக்குதல் நடத்தும் குறிப்பிட்ட நபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவர்களை அடையாலம் காணும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.