மிகக்கொடிய சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்காவது நாளாக பட்டினி போரட்டம்
சிறப்பு முகாம்களில் இலங்கைத்தமிழர் அகதிகள் அடைக்கப்படுவது அவர்கள் அங்கிருந்து விடுதலை பெறுவதற்காக அடிக்கடி பட்டினிபோரட்டங்கள் நடந்தும் போது ஒரு சில அகதிகளை மட்டும் கண்துடைப்புக்கு விடுதலை செய்து விட்டு வழங்குகின்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாது அதிகாரிகள் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதினை வழமையாக கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக ஏமாற்றமடைந்து குறைந்தது மூன்று வருடங்கள் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள பத்து இலங்கை அகதிகளான நா.பகீதரன், த.உதயதாஸ் ,த.மகேஸ்வரன், க.கிருஸ்ணமூர்த்தி, செ.யுகபிரியன், பா.சிவனேஸ்வரன், ச.விஜயகுமார், க.இராஜேந்திரன், ஆகியோர்
தங்களை இந்திய தண்டனை சட்ட முறைகளின் படி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து குடும்பக்களுடன் வாழ்வதற்கான அனுமதியினை வேண்டி காலவரையறையற்ற பட்டினி போரட்டத்தினை 01.10.2015 தொடக்கம் ஆரம்பித்துள்ளனர்.
அரச அதிகாரிகள் வந்து உண்ணாவிரத்தத்தினை கைவிடும் படியும் இல்லையெனில் கைது செய்யும் நிலை ஏற்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.