யாழ்.உடுப்பிட்டியில் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
உடுப்பிட்டி காளிகோவிலடி பகுதியில் போர்காலத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடொன்று பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் மலசல குழியை துப்புரவு செய்தபோது நேற்றய தினம் குழியில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் இந்தப் பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 14 கைக்குண்டுகள், 4 கிளைமோர்கள், 5 ஆயிரம் வரையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.