பாகுபலி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி குறித்து முதன்முறையாக கருத்துத் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா.பாகுபலி படத்தின் ஒரு பாடல் காட்சியில் நாயகனும், நாயகியும் மிக நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு காட்சி வரும்.

இதில் நடிகை தமன்னா நாயகன் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தார்.

படம் வந்தபோது விமர்சகர்களால் இந்தக் காட்சி பெரிதும் விமர்சிக்கப்பட்டது, மேலும் இந்தக் காட்சி பலத்த கண்டனத்திற்கும் உள்ளானது.

இது குறித்து படத்தின் இயக்குனரோ, நாயகியோ எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தக் காட்சி பற்றி நடிகை தமன்னா முதன்முறையாக வாய்திறந்து பேசியிருக்கிறார்.

“திரைப்படம் மற்றும் காட்சிகள் குறித்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு ஆனால் முடிவில் திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே.

ntlrg_150604095451000000படங்களை மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள், மேலும் படங்களில் பெண்ணை அழகாக உயர்த்திக் காண்பிக்கின்றனர். படங்களைப் பார்க்கும்போது ஒருகாட்சியை பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர அதன் உள்ளே சென்று ஆராயக்கூடாது.

திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன, ஒரு காட்சியை பார்த்து ரசித்து கருத்துத் தெரிவிக்கலாம்.

ஆனால் அதன் அடி ஆழம் வரை சென்று ஒரு காட்சியை எப்படி எடுத்தார்கள் என்று அலசி ஆராய்ந்தால் தேவையில்லாமல் மன நிம்மதிதான் கெடும். பொதுவாக திரைப்

படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே, ஆராய்ச்சி செய்வதற்கு அல்ல” என்று பாகுபலி படத்தின் காட்சி குறித்து தனது விளக்கத்தை முதன்முறையாக கூறியிருக்கிறார் நடிகை தமன்னா.

தற்போது தோழா படத்தில் நடித்துவரும் தமன்னா, விரைவில் பாகுபலி 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்க தெளிவா தான் இருக்கீங்க…

Share.
Leave A Reply