அமெரிக்காவில் உள்ள பிராண்டன் மற்றும் பிரிட்டானி தம்பதியருக்குப் பிறந்த குழந்தை மண்டை ஓடு இல்லாமல் இருந்தது.

Anencephaly எனும் இந்நோயுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெக்சன் ஸ்ட்ராங் என்று பெயரிட்டனர்.

இந்தக் குழந்தையின் முதலாவது பிறந்தநாளை பிராண்டன், பிரிட்டானி தம்பதியர் அண்மையில் கொண்டாடினர்.

ஜெக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனையில் Anencephaly என்ற மண்டையோட்டு குறைபாட்டு நோயுடன் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மண்டையோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.

இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள்.

2CC1F6E500000578-3247851-image-a-9_1443194561016குழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை

என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஜெக்சனின் எதிர்காலம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த மருத்துவர்கள், அவன் பசியாக இருப்பதாகச் சொல்ல மாட்டான். சாதாரண வாழ்விற்குத் தேவையான எதையும் அவன் செய்ய மாட்டான், என்றுள்ளனர்.

குழந்தை புறந்து 1 வருடம் கடந்துள்ள நிலையில்,

2CC1F83400000578-3247851-image-m-8_1443194543545எங்கள் மகனின் இவ்வாறான நிலை ஆரம்பத்தில் எமக்குக் கடினமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை, எந்நேரத்திலும் நாங்கள் அவனை இழக்க நேரிடும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவன் தற்போது மிக திடமாக உள்ளான்

‘என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பல மருத்துவக் குழுக்களின் சந்தேகங்களுக்கு மத்தியில், ஜெக்சன் தற்போதும் எங்களுடன் உள்ளான். முன்பைவிட வலுவாக உள்ளான். அவனுக்கு குழாய் மூலம் உணவூட்ட வேண்டியுள்ளதே தவிர அவனால் கேட்கவும் பார்க்கவும் கதைக்கவும் சிரிக்கவும் முடிகிறது. அவன் ஒவ்வொருநாளும் புதிதாக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.

இருந்தாலும், அவனைப் பற்றிய மன உழைச்சல் தொடர்கிறது. காரணம், அவனுக்குள் ஏதோவொன்று நடக்கிறது, எப்படி அதை நாங்கள் கண்டுபிடிப்பது, எவ்வாறு அதை சரிசெய்வது?

எந்நிலையிலும் தமது குழந்தையை இழக்க விரும்பாத இந்தத் தம்பதியர், தமது குழந்தையை தொடர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அவனுக்கு சாதாரணமானவர்களைப் போன்றதொரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்!

JaxonStrong11_Main_2503914aJaxonStrong_04_2503839a

Share.
Leave A Reply