சூட்கேஸுக்குள் ஒளிந்துகொண்டு பெரு நாட்டிலிருந்து வெளியேற முயன்ற நபர் விமான நிலையத்தில் சிக்கினார்
சூட்கேஸுக்குள் ஒளிந்துகொண்டு, பெரு நாட்டிலிருந்து வெளியேற முயன்ற நபர் ஒருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் அகப்பட்டுள்ளார்.
பெரு தலைநகர் லீமாவிலுள்ள ஜோர்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய சூட்கேஸ் ஒன்றை பயணி ஒருவர் இழுத்துக்கொண்டு வந்தார்.
அப்பயணியின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக அவரின் சூட்கேஸை சோதனைக்காக திறக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உத்தரவிட்டனர்.
சூட்கேஸை திறக்காமல் இருப்பதற்கு அப்பயணி பல காரணங் களைக் கூறிக்கொண்டிருந்தார். இதனால் அவர் மீதான சந்தேகம் அதிகரித்தது.
இறுதியில் அவரின் சூட்கேஸை திறந்தபோது, அதற்குள் ஒரு மனிதர் இருப்பதைக் கண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திகைத்தனர்.