தங்கையின் வாழ்வை வீணாக்கியோரை அண்ணன் காத்திருந்து பழிவாங்குவது போன்ற திரைக்கதைகளை நிறைய தமிழ்ப் படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

அத்தகைய சம்பவங்கள் நிஜவாழ்க்கையிலும் இடம்பெறுகின்றன.

ஆம், 1970 களில் இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல்கள் தொடர்பான செய்தியே இது.

இது தொடர்பான செய்தித் தொகுப்பொன்று எமது சகோதர மொழி ஊடகமான ஹிருவில் ஒளிபரப்பாகியது.

அச்செய்தியின் சாரம்சம் வருமாறு:

‘ஹிதுமதே ஜீவதே’ என அழைக்கப்படும் சுமதிபால என்ற அந்நபரின் சகோதரி உயர் பொலிஸ் அதிகாரி மற்றும் சிலரால் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

1972 ஆம் ஆண்டளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிங்கள , தமிழ் புத்தாண்டு நிகழ்வில் அழகியாக தெரிவு செய்யப்பட்ட அவரது தங்கையை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்துள்ளனர்.

இதனையடுத்து கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரியை அந்நபர் கொலைசெய்துள்ளார்.

பின்னர் 1975 ஆம் ஆண்டு அந்நபருக்கு தூக்குத்தண்டை விதிக்கப்படுகின்றது. எனினும் தூக்கிலிடப்படுவது முதல் நாள் உணவு வழங்கப்பட்ட தனது பீங்கானை உடைத்து உடம்பெங்கிலும் காயமேற்படுத்திகொள்வதனால் தூக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் அப்போதைய ஜனாதிபதியுடன் பேசி அவரது தூக்குத்தண்டனையை இரத்துச் செய்துள்ளார்.

இதனையடுத்து பல தடவைகளை சிறையிலிருந்து தப்பிய அவர், தனது தங்கையை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவரையும் பழிவாங்கியுள்ளார்.

அவர் ஒவ்வோர் சிறையிலும்  இருந்த காலத்தில்  மஹிந்த ராஜபக்ஷ , ரோஹண விஜேவீர , விஜே குமாரதுங்க அக்காலப்பகுதியில் புகழ் பெற்ற ‘மருசிரா’ என்றழைக்கப்பட்ட கொலையாளி ஆகியோருடனும் இருந்துள்ளார்.

‘மருசிரா’ அவருகு வைத்த பெயரே ‘இதுமதே ஜீவதே’.

1978 ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும் அப்போதைய அரசு தூக்குத்தண்டனை முறைமையை இல்லாமல் ஆக்குகின்றது.

இவ்வாறு சிறையிலேயே 39 வருடங்களைக் கழித்துள்ளார். பின்னர் ஒரு நாள் தன்னை விடுதலை செய்யவோ அல்லது தூக்கிலிடும் படியோ அவர் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தை முன்னெடுத்த வேளையில் அவரை தொலைக்காட்சியில் கண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

பின்னர் வெளியே வந்த அவர் 8 மாதங்கள் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வேளியேறி சாதாரண வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றார் சுமதிபால.

தனக்கு சொந்தமான காணியை தங்கை மற்றும் தாயின் பெயரில், விகாரைக்காக வழங்கியுள்ளார்.

தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , தங்கையை கொன்ற 5 பேர் மற்றும் தன்னை சிறையில் கொல்ல வந்த ஒருவரையும் கொன்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்

Share.
Leave A Reply