பாலிவுட் திரை உலகில் தீபிகா – ரன்வீர் இருவரும் ‘பாஜிரோ மஸ்தானி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.
இருவரும் காதல் சிறகை காற்றில் விரிந்து பறக்கும் ஜோடி என்ற இந்தி திரை உலகில் கிளுகிளுப்பாக பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப இந்த ஜோடி நெருக்கமாக ஊர், உலகம் எல்லாம் சுற்றி வருவதாக விதவிதமான தகவல்கள் உலாவி வருகின்றன.
அதை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. தீபிகா – ரன்வீர் ஜோடி சமீபத்தில் மும்பை விமான நிலையத்துக்கு கைகோர்த்தபடி நெருக்கமாக வந்தது. அவர்களை பத்திரிகையாளர்களும், பொது மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காருக்கு சென்ற அவர்கள் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டனர். அங்கு நின்றவர்களைப் பற்றியோ, வேடிக்கை பார்த்தவர்கள் குறித்தோ எந்த கவலையும் படவில்லை. கவனத்தையும் திசை திருப்பவில்லை.
இதை பார்த்த ரசிகர்கள் குதூகலத்துடன் துள்ளிக் குதித்தனர். விமான நிலையத்துக்கு வந்த சிலர் பொது இடத்தில் இப்படியா? என்று முணு முணுத்தபடி சென்றனர்.
இலவசமாக கிடைத்த பிரபல நடிகர் – நடிகையின் முத்த காட்சி சமூக வலைத்தளங்களிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களுடைய உண்மை ரசிகர்கள் ‘அடடா… எப்படிப்பட்ட அருமையான ஜோடி என்ற வாசகத்தை சேர்த்து ‘வாட்ஸ்அப்’பில் பரவ விட்டு இருக்கிறார்கள்.
இந்தி பட உலகில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.