ஜனாதிபதி மைத்திரி வடக்கு பயணம் முடிந்த பிற்பாடு தனது முக நூலின் முன் பக்க படத்தை மாற்றம் செய்துள்ளார் அதில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனின் படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் முறுகல் நிலை உள்ள நிலையில் ஏனைய மகாண முதலமைச்சர்களின் படங்களை இது வரை பதிவேற்றம் செய்யாத மைத்திரிபால முதலமைச்சர் சீ.வியின் படத்தை பதிவேற்றம் செய்தமை அரசியல் அவதானிகளால் உன்னிப்பாக அவதானிக்கப் படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்களுடன் நல் உறவில் உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரி வடக்கு முதல்வரை மதிப்பதும், அரவனைப்பதும் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் மட்டில் கலக்கத்தை ஏற்பாடுத்தியுள்ளது.

Msfb-Cv_01
ஜெனாதிபதி  சிறிசேனாவின் முகபுத்தகத்தில் காணப்படும் படமானது மைத்திரி கிளிநொச்சி வந்தபோது எடுக்கப்பட படமாகும்

img_3700

இது தான் தேசிய நல்லிணக்கம்:
இருவரும் தங்களின் சொந்தப் பாசையான சிங்களத்தில் உரையாற்றியதால் வந்த சந்தோசம் காரணமாக  மைத்திரி தனது  முக புத்தகத்தில் விக்கினேஸ்வரனின் படத்தை பதித்தாரோ??

தேசிய நல்லிணக்கம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?  சிங்கள தேசியத்துக்குள்  தமிழ்தேசியத்தை கலந்து  படிப்படியாக தமிழ் தேசியத்தை இல்லாதொழிப்பது..

சம்பந்தன், சுமந்திரன், ரணில், மைத்திரி, சந்திரிகா, சம்பிக்க …  என எல்லோருமே  “ஒற்றை ஆட்சியை விரும்பும்  சிங்கள தேசியவாதிகள் தான்.

இனிமேல்,  தமிழ் தேசியத்துக்கும், தமிழ் தேசிய வாதிகளுக்கும்   இடமில்லை என்பது உறுதியாகிவிட்டது.

0014

இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை மேற்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான உணவு உற்பத்தித் திட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்க   05-10-2015 அன்று  ஜனாதிபதி மைத்திரிபால வந்தபோது,  முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  அந்த நிகழ்வில்  தமிழ் மக்கள் மத்தியில்  முழு உரையையும்  சிங்களத்தில்தான் உரையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

கிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 600 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!(படங்கள்,வீடியோ)

Share.
Leave A Reply