டெல்லி: டெல்லி அருகே தலித் குடும்பத்தினரை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டா அருகே கவுதம புத்த நகரில் நிகழ்ந்த சம்பவம் என கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
அதில் ஒரு ஆண், பெண் நிர்வாணமாக ஆவேசமாக பொதுமக்கள், போலீசார் முன்னிலையில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதும் அவர்களை போலீசார் இழுத்து செல்வதுமான காட்சி இடம்பெற்றுள்ளது.
வயதுக்கு வந்தவர்கள் மட்டும்…
தலித் தம்பதியினர் தாங்கள் கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்தை தட்டிக் கேட்டனர்; இதனால் அவர்களை போலீசாரே நிர்வாணப்படுத்தி அடித்து தாக்கி இருக்கின்றனர் என்ற வாசகங்களுடன் இந்த வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது.
இச்சம்பவத்துக்கு கடுமையான கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது. அதே நேரத்தில், தாங்கள் கொடுத்த புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததால் தம்பதிகள் தாமாகவே ஆடைகளை களைந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர் என்றும் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநில போலீசாரோ, கவுதம புத்த நகர் சம்பவம் ஜோடிக்கப்பட்டது.
அந்த வீடியோவில் உள்ள இருவரும் வேண்டுமென்றே அரங்கேற்றிய சம்பவம் அது என தெரிவித்துள்ளனர்.
வந்தாலும் வந்தீங்கள் இதையும் பார்த்துவிட்டு செல்லுங்கள்
வீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்! (Video)