வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல­பொடஎத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து சர்சையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களில் இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த விடயங்கள் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது குறித்த மூவரும் ஆஜராகத் தவறியமையால் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

images
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனை காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2005ம் ஆண்டு மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்த விசாரணைகளுக்காக நேற்று பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் நேற்று மாலை 05.00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். அங்கு ஆரம்ப கட்ட வாக்குமூலத்தை பெற்ற பின்னர் கைதான பிள்ளையானை காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் முன்னதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் மற்றும் ரங்கசாமி கனகநாயகம் எனும் இருவர் கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply