டெல்லி: இலங்கை உள்நாட்டு, போரில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தாருக்கு இந்தியா சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.இந்த வீடுகள் கட்டுவதற்கு பணம் ஒதுக்க வேண்டுமானால், தன்னுடன், படுக்கையை பகிர வேண்டும், என்று செஞ்சிலுவை சங்க அதிகாரியால் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து இந்தியா விசாரணையை தொடங்கியுள்ளது.இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்களுக்காக, இந்தியா, 50ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்திய அரசுடன், இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களும், இப்பணியை மேற்பார்வையிட்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, பாதிக்கப்பட்ட சிலருக்கு வீடுகளை வழங்கினார்.
இந்நிலையில் இலங்கை பத்திரிகையொன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த பெண் ஒருவர், வீடு வேண்டுமெனில் படுக்கையை பகிர செஞ்சிலுவை சங்க அதிகாரி கட்டாயப்படுத்துவதாக கூறியிருந்தார்.
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியை சேர்ந்த பெண்தான் இக்குற்றச்சாட்டை கூறியுள்ளார். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த அந்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று இலங்கை அறிவித்தது. இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கமும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது.
இதனிடையே, விவகாரத்தை சீரியசாக எடுத்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை. உரிய விசாரணை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக இலங்கையிடம் கூறியுள்ள இந்தியா, அதுவரையிலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் தடுத்து வைக்கவும் கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டு தற்போதுதான் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை சீரியசாக எடுப்போம் என்றும், வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில பத்திரிகையொன்றிடம் கூறியுள்ளார்.இதுவரை 30 பெண்களின் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்க செயலர் தெரிவித்துள்ளார்.sumanthiranசிறிதரன்  அண்ணா உங்களுக்கு இந்தவிடயம் தெரியுமா??

கிளிநொச்சி மாவட்டத்தில்  அதிகக்கூடிய வாக்குகளை பெற்று  பாராளுமன்ற   பதவியை பெற்ற  எஸ்.சிறிதரனுக்கு  இந்தவிடயம் தெரியுமா? இது சம்பந்தமாக எதாவது நடவடிக்கை எடுத்துள்ளாரா? ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட பெண்களை கூட்டிச்சென்று பொலிஸாரிடமாவது  முறைப்பாடு அளித்திருக்கலாமே?

அவருக்கு இப்ப அதெற்கெல்லாம்  நேரமில்லை.  இனி அடுத்த தேர்தலுககு வாக்கு பொறுக்க மட்டும்தான் அவர்  மக்கள் முன்வருவார்.

இந்திய வீட்டுத் திட்டம்: பயனாளிப் பெண்ணிடம் பாலியல் சலுகை கோரியதாக புகார் (பிபிசி வெளியிட்ட செய்தி)

120108151853_india_housing_vanni_304x171_bbc_nocreditஇலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளியான பெண் ஒருவரிடம் அதிகாரி ஒருவர் பாலியல் சலுகை கோரியதாகக் கூறப்படும் விடயத்தில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியிலான இந்த வீட்டுத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே செயற்படுத்தி வருகின்றது.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரி ஒருவரே பாலியல் சலுகை கோரியதாக முறையிடப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரி கட்டாய விடுப்பில் இருப்பதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சாட்சியங்கள் கிடைக்குமானால் குற்றவியல் விசாரணைக்கு காவல்துறையின் உதவி நாடப்படும் என்று செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, அரச தரப்பிலும் இது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இந்த விடயம் குறித்து பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற பெண்கள் செயற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், ஒரு பெண்ணல்ல.

இருபத்தைந்து, முப்பது பெண்களிடம் அந்த அதிகாரி, இவ்வாறு பாலியல் லஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஒரேயொரு பெண் மாத்திரமே எழுத்து மூலம் முறையிட்டிருப்பதாகவும் கூறினார்.

தங்களிடம் இரண்டு பெண்கள் இதுபற்றி முறையிட்ட போதிலும், அந்த விடயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றால் தங்களுடைய வீட்டின் அடுத்த கட்டத்திற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து. இந்த விடயம் குறித்து உரிய நிறுவனங்களின் கவனத்திற்குத் தாங்கள் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 89 ஆயிரம் குடும்பங்கள் பெண்களை, தலைமைத்துவமாகக் கொண்டிருப்பதாகவும், இந்தப் பெண்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளில் பாலியல் லஞ்சம் என்பது சாதாரணமானது. இது புதிய விடயமல்ல என்று ஸ்ரீன் ஸரூர் கூறுகின்றார்.

இந்தப் பெண்கள் இயற்கை வளங்களையே தங்களுடைய தேவைகளுக்காக சார்ந்திருக்கின்றார்கள். இந்த வளங்கள் யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகிய பின்னரும், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதனால் அவற்றைப் பெற்றுக்கொள்ளச் செல்லும் பெண்கள், கட்டாயமாக, இத்தகைய பாலியல் லஞ்சத் தொல்லைக்கு ஆளாக நேரிடுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தடுக்க வேண்டுமானால், யுத்தத்தின் பின்னர் வருங்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்புக்களில் தீர்மானங்களை எடுக்கும் நிலையிலும் செயற்படுத்தும் நிலையிலும் 50 வீதமான பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

நாட்டில் நடைமுறையில் உள்ள லஞ்ச ஊழல் தொடர்பான சட்ட விதிகளில் பொருட்கள் மற்றும் பணம் என்பவற்றைப் பெறுவதையே லஞ்சக் குற்றமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பாலியல் லஞ்சம் பற்றி அதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த சட்ட விதிகளில் பாலியல் லஞ்சக் குற்றம் குறித்து தெளிவான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

அத்துடன் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான ஒழுக்கக் கோவையில் பாலியல் லஞ்சம் கோருபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதுடன், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற விதிமுறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீன் ஸரூர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply