அமெரிக்காவின் பிரபல மொடலான கிம் கர்தாஷியனின் (Kim Kardashian) தாயாரும், ஆணாக இருந்து பெண்ணாக மாறிய முன்னாள் ஒலிம்பிக் சம்பியன் புரூஸ் ஜென்னரின் முன்னாள் மனைவியுமான கிறிஸ் ஜென்னர் தனது வாழ்வில், மிக சங்கடமான தருணம் பறக்கும் விமானமொன்றில் தனது கணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அகப்பட்டுக் கொண்டமைதான் எனக் கூறியுள்ளார்.
Kris Jenner and ex-husband Bruce Jenner
1976 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான டெகாத்லன் போட்டியில் புரூஸ் ஜென்னரை திருமணம் செய்துகொண்டவர் கிறிஸ் ஜென்னர்.
இவர் ஏற்கெனவே சட்டத்தரணி ரொபர்ட் கர்தாஷியனை திருமணம் செய்திருந்தார்.
இத்திருமணங்கள் மூலம், பிறந்த பிள்ளைகளான கிம் கர்தாஷியன் கோர்ட்னி கர்தாஷியன், கோல் கர்தாஷியன், கென்டல் ஜென்னர், கெய்லி ஜென்னர் ஆகியோர் தற்போது அமெரிக்காவின் பிரபல மொடல்களாக உள்ளனர்.
ஆடைகள், வாசனைத் திரவியங்கள் உட்பட பல வர்த்தக நடவடிக்கைகளில் கர்தாஷியன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்குடும்பத்தினர் தொடர்பான கீப்பிங் வித் த கர்தாஷியன் எனும் தொலைக்காட்சித் தொடர் அமெரிக்காவில் மிகப் பிரபலமானது.
ஆண்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற வீரரான புரூஸ் ஜென்னர் தற்போது பெண்ணாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான் பெண்ணாக மாறிவிட்டதை இவ்வருட மத்தியில் புரூஸ் ஜென்னர் பகிரங்கமாக அறிவித்தார்.
அவர் தனது பெயரையும் கெட்லீன் ஜென்னர் என மாற்றிக்கொண்டுள்ளார்.
தற்போது கெத்லீனும் புரூஸ் ஜென்னரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், 59 வயதான கிறிஸ் ஜென்னர் அளித் செவ்வியொன்றில் அவரின் வாழ்க்கையில் மிக சங்கடமான தருணம் எது என வினவப்பட்டது, அப்போது, பல வருடங்களுக்குமுன் பறக்கும் விமானமொன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டு அம்பலமானதே தனது வாழ்வின் மிக சங்கடமான தருணம் என கிறிஸ் ஜென்னர் பதிலளித்துள்ளார்.
இவ்வாறு பறக்கும் விமானத்தில் பாலியல் உறவில் ஈடுபடுவர்கள் “மைல் ஹை கிளப்” எனும் கிளப்பில் இணைவதாக வர்ணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கிறிஸ் ஜென்னர் கூறுகையில், அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமான மொன்றில், நானும் எனது முன்னாள் கணவர் புரூஸ் ஜென்னரும் பயணம் செய்தபோது, உற்சாக மிகுதியால் விமானத்தின் கழிவறைக்குச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டோம்.
நாம் எமது ஆசனங்களுக்கு திரும்பிவந்தபோது எவரும் எதுவும் கூறவில்லை.
எமது நடவடிக்கையை எவரும் அறிந்திருக்கவில்லை என எண்ணினோம்.
ஆனால், விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் இருந்தபோது, அவ்விமானத்திலிருந்த சகல பயணிகளுக்கும் எமது நடவடிக்கை குறித்து விமான ஊழியர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்தார்.
விமானத்திலிருந்த ஒலி வாங்கியை கையில் எடுத்த விமான ஊழியர், ‘வாழ்த்துக்கள் மிஸ்டர் அன்ட் மிசஸ் ஜென்னர், நீங்கள் மைல் ஹை கிளப்பில் இணைந்துவிட்டீர்கள்” என அறிவித்தார்.
அப்போதுதான் எமது நடவடிக்கை விமான ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதை நாம் உணர்ந்தோம். எமக்கு மிக சங்கடமாகிப் போய்விட்டது” என கிறிஸ் ஜென்னர் தெரிவித்தார்.
கிறிஸ் ஜென்னரும் புரூஸ் ஜென்னரும் 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2013 ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.
இவ்வரு டம் இவர்கள் விவாகரத்து பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது தன்னைவிட 25 வருடங்கள் இளையவரான கொரி கெம்பலை (34) கிறிஸ் ஜென்னர் காதலித்து வருகிறார்.
Kris Jenner left embarrassed after flight attendant congratulates her on having sex on a PLANE