ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார்.

இவரின் மனைவியான முகம்மது இஸ்மாயில் சித்தி பரினா (38 வயது)  என்பவரே தாக்குதலுக்கு இலக்கானவராவர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் நேற்று  பிற்பகல் 4.00 மணியளவில் வீட்டில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தினை மூடிய நிலையில் வந்த இரு இனம் தெரியாத நபர்கள் இப் பெண்ணின் தலையில் பலமாக தாக்கிவிட்டு இவரின் வீட்டில் இருந்த 40 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இக் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply