கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி கற்று வரும் மாணவிகள் சிலரை மறைமுறைமாக கையடக்கத்தொலைபேசியில் பாடசாலை பணியாளர் ஒருவர் புகைப்படம் எடுத்துவருவதாகவும் இவ்வாறு மறைமுகமாக புகைப்படங்களை எடுத்து எவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ எனவும் இதனால் தாங்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் மாணவிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பாடசாலையில் இடைவேளை நேரத்தில் இருமாணவிகள் பாடசாலை வளாகத்தில்; உள்ள மரம் ஒன்றின் கீழ் உரையாடிக்கொண்டிருந்த சமயம் குறித்த இருமாணவிகளையும் பாடசாலைக் கட்டடத்தில் இருந்து மறைமுறைகமாக புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் குறித்த மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போதைய சூழலில் முகநூல்களில் பெண்கள் யுவதிகள் மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கெதிராக தவறான செய்திகளை வெளியிட்டதனால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட அதிகமானோர் மன உழைச்சல் காரணமாக தற்;கொலை செய்தமை மற்றும் தற்கொலைகளுக்கு முயற்சித்த சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு தங்களை இவ்வாறு முறைமுகமாக புகைப்படங்களை எடுத்த பாடசாலைப் பணியாளர் இப்புகைப்படங்களை எவ்வாறான தேவைகளுக்குப் பயன்படுத்துவார்களோ என மாணவிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த பாடசாலையின் பெண் அதிபரை செய்தியாளர் ஒருவர் தொடர்பு கொண்டு வினவிய போது

குறித்த ஊழியரை தானே படம் எடுக்கும் படி பணித்ததாகவும், தான் ஒரு பாதிக்கப்பட்ட அதிபர் எனும் வகையில் தனக்கு எதிராக செயற்படுகின்ற மாணவிகள் மற்றும் மாணவர்களை அடையாளம் காண்பதற்கே இவ்வாறு செயற்பட்டதாகவும் இது ஒரு சாதரண விடயம் என்றும் இதனை ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் என்றும் பிரசுரிப்பது நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த ஊழியரால் எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படம் எதிர்காலத்தில் தவறான நோக்கில் பயன்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அது தங்களின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதித்துவிடும் என்றும் எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவிகள் கோருகின்றனர்.

Share.
Leave A Reply