குளியாபிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் தரம் 9 மற்றும் 13 இல் கல்வி கற்கும் மாணவி மற்றும் மாணவன் காணாமல் போனதையடுத்து பெற்றோர்கள் இரவு முழுவதும் அவர்களைத் தேடியுள்ளனர்.
பின்னர் அவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் வீடு திரும்ப பஸ்ஸில் ஏறியுள்ளனர்.
இதன்போது அதே பஸ்ஸில் அம்மாணவனும், மாணவியும் ஏறியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.பின்னர் பெற்றோர் , இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இருவரும் கடந்த 12 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் உடைகளை வேறொரு இடத்தில் வைத்து மாற்றிக்கொண்டு கடுபொத்த பிரதேசத்தில் உள்ள தமது தெரிந்த ஒருவரின் வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.
எனினும் அங்கிருப்போர் இவர்களை ஏற்க மறுக்கவே , இருவரும் காடொன்றில் இரவுப் பொழுதை செலவிட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் பெற்றோர் , மாணவனின் இட த்துக்குசென்று இருவரையும் தேடியுள்ளனர். பின்னர் கொழும்பு பஸ்ஸில் ஏறி குளியாபிட்டியவுக்கு வரும் வழியில் மாணவனும் , மாணவியும் அதே பஸ்ஸில் ஏறியுள்ளனர்.
தற்போது மாணவன் கைதாகியுள்ளதுடன் , மாணவி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்