பொலன்னறுவை, குருப்பு சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறம் அமைந்துள்ள கோழிக் கூண்டில் கடந்த 8 வருடங்களாக வாழ்ந்து வரும் 70 வயதான நபரொருவர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் திருமணமாகாதவர் எனவும் அவரை உறவினர்களே பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு புகைப்பழக்கம் இருப்பதாலும் , அடிக்கடி பீடி பிடிப்பதாலும் அவருக்கு சுதந்திரமாக புகைப்பிடித்து வாழ அக்கோழிக் கூண்டிலேயே வாழவைத்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்முதியவரும் தனது விருப்பின் பேரிலேயே அங்கிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அவரை அங்கு வைத்திருக்க வேண்டாம் எனவும் கோழிக்கூண்டை உடைத்துப்போடும் படியும் பொலிஸார் அவரது உறவினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

karu news pix (1)karu news pix (2)karu news pix (3)karu news pix (4)karu news pix (5)

Share.
Leave A Reply