கடும் மழையின்போது வடிகான் ஒன்றிற்குள் விழுந்த பாடசாலை மாணவி ஒருவர் அதற்குள் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (15) மாலை 6.00 மணியளவில் கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி கட்டுகஸ்தோட்டை மடவள வீதியைச் சேர்ந்த மொஹமட் சஹாப்தீன் அஸ்ரா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கண்டி நகரில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆண்டு 9 இல் கல்வி பயிலும்

tkn-10-17-rs-07-dimஇம் மாணவி மேலதிக வகுப்பிற்குச் சென்றுவிட்டு சக மாணவிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடும் மழை காரணமாக பாதையை விட்டு ஒதுங்கியபோது அருகிலிருந்த வடிகானில் மூன்று மாணவிகள் விழுந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்டபோதும் இம்மாணவி வடிகானில் சிக்கியுள்ளார்.

265762172dead-girl2 அயலவர்கள் மிக சிரமத்துடன் அவரை மீட்டபோது உயிரிழந்து காணப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

மாணவியின் மரணம் தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sequence 01.Still006Sequence 01.Still009

Sequence 01.Still010

Share.
Leave A Reply