வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் புதன்கிழமை (14) கடத்தப்பட்ட குடும்பப் பெண், நேற்று வியாழக்கிழமை (15) காலை புத்தூர் பகுதியிலுள்ள சட்டதரணி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு காரணமான அவரது கணவர் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்று வரும் தாபரிப்பு வழக்கு நடவடிக்கைக்கு தாயாருடன் சென்று விட்டு திரும்பிய இ.ஜானகி (வயது 32) என்ற குடும்பப் பெண்ணை வெள்ளை வானில் வந்த கும்பல், கம்பர்மலை பகுதியில் வைத்து புதன்கிழமை (14) கடத்திச் சென்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயார், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தலமையிலான இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதனையடுத்து கடத்தப்பட்ட பெண், புத்தூர் பகுதியிலுள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார், அவரை மீட்டனர்.

இக்கடத்தலுக்கு கணவர் 25,000 ரூபாய் கூலியாக கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்தவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த நபர்களை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கணவரிடம் தபாரிப்புப் பணம் வாங்கி வந்த குடும்பப் பெண் வெள்ளைவானில் கடத்தல்

 551712kdh200white4jpg

வழக்குக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு தாயாரோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வானில் வந்த இனந்தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணம் -வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:

இதில் இதே இடத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் தனது கணவரிடம் இருந்து தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்காக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று இடம்பெற்றது.

இந்த வழக்குக்குத் தனது தாயாருடன் சமுகமளித்துவிட்டு இருவரும் பஸ்ஸில் வீடு திரும்பினர். பஸ் தரிப்பிடத்தில் இறங்கிய இவர்கள் நடந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத குழு ஒன்று குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றனர் என அவரின் தாயார் வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை : யாழில் சம்பவம்

thukuதந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய கிருபாகரமூர்த்தி ராஜநந்தினி ஆவார்.

குறித்த பெண் ணின் சடலம் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply