கொண்டயாவின் சகோதரனான சமன் ஜயலத்தின் மரபணு அறிக்கை, சேயாவின் மரபணு அறிக்கையுடன் ஒத்துப்போவதாக மினுவாங்கொடை நீதவான் நேற்று தெரிவித்தார்.

இதன்படி நீண்டநாட்களாக இழுவையில் இருந்த வழக்கில் ஒரு புதுத்திருப்பம் நேற்று ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் சிலவற்றை பொலிஸார் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை களவாடுதல் , பெண்கள் குளிப்பதை பார்த்தம் உட்பட விநோதமான பாலியல் நட த்தைகளை கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 6 வருடங்களுக்கும் அதிகம் சிறையில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சேயா கொலை தொடர்பில் அவர் பொலிஸுக்கு அளித்த வாக்குமூலம் வருமாறு:

”திறந்திருந்த ஜன்னல் ஊடக கட்டிலில் காலொன்றை வைத்து வீட்டுக்குள் பாய்ந்துகொண்டேன். அப்போது குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தனர்.

எப்படியாயினும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் சிறுமியை அணைத்துக்கொண்டு ஜன்னலின் ஊடாக வெளியே பாயந்தேன்.

பின்னர் இருட்டில் சிறுமியை தூக்கிக்கொண்டு மணல் வீதியின் ஊடாக சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,” அன்று பிள்ளையின் வீட்டுக்குச் சென்றபோது அவரது அம்மா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது ஜன்னலின் ஊடாக தெரிந்த து. எனினும் அப்போது வீட்டுக்குள் செல்வதற்கு வழியிருக்கவில்லை, பிள்ளைகளும் இருக்கின்றன, வீட்டில் ஆட்கள் இருப்பார்கள் என பயம் ஏற்பட்டது, பின்னர் இரவாகும் வரை நடந்து திரிந்தேன்.

நான் மீண்டும் வரும்போது அறையில் மின்குமிழ் எரிந்துகொண்டிருந்தது. அப்போது நினைத்துக்கொண்டேன் நான் கட்டாயம் எதையேனும் செய்வேன் என்று .

பின்னர் ஜன்னல்கள் அருகே சென்று ஜன்னல்களை திறக்க முயன்றேன். இதன்போது ஒரு ஜன்னல் திறந்தே இருந்தது.

பின்னர் அதனூடாகவே கட்டிலில் கால் வைத்து உள்ளே நுழைந்தேன், அப்போதும் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். பின்னர் உள்ளே சென்று வீட்டினுள் கத்தியொன்றை தேடினேன். எனினும் கத்தியொன்று இருக்கவில்லை.

கத்தியொன்று இன்றி பெண் அருகில் செல்லும்போது அவர் அலறினால் என்ன நடக்கும் என எனக்கு பயமும் ஏற்பட்டது. அவ்வாறு நடந்தால் எல்லோரும் வந்து பெரிய பிரச்சினை ஏற்படும் என தோன்றியது,

இதனால் முடிவை மாற்றிக்கொண்டேன். அப்போது பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். நான் பிள்ளையை கொண்டு செல்ல தீர்மானித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அந்நபர் சேயாவின் தாயை இலக்குவைத்தே வீட்டுக்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவரை பயமுறுத்தி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தும் நோக்குடனேயே அவர் கத்தியொன்றைத் தேடியுள்ளார்.

எனினும் அது கிடைக்காத காரணத்தினால் குழந்தையை இலக்குவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சேயா சந்தேகநபரின் முகத்தை கடித்து தப்பிக்க முயன்றுள்ளதாகவும் , இதனால் கோபத்துக்குள்ளான அவர் கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply