திம்புவில் நான்கு கோரிக்கைகள்…

திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை (ENLF ) முன்னணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும்.

அக்கோரிக்கைகளை நான்கு இயக்க்கூட்டமைப்பு தயாரித்திருந்தபோதும், தமிழர் விடுதலைக் கூட்டணியும், புளொட் இயக்கமும் அவற்றை ஏற்றுக்கொண்டன.

அதனால் திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புகளது குரல் ஒரேவிதமாக ஒலிக்கக்கூடிய சூழ்நிலை உருவானது.

அதேசமயம் அக்கோரிக்கைகளை தெளிவாக ஆராய்ந்தால் ஒரு விடயம் புலப்படும்.

தமிழீழக் கோரிக்கை கைவிடப் போவதில்லை என்று கூறமுடியாத நிலையில், தமிழீழ கோரிக்கையை ஒத்ததாகவே அக்கோரிக்கைகள் அமைந்திருந்தன.

திம்பு பேச்சில் முன்வைக்கப்பட்ட அந்த நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் இவைதான்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்று அங்கீகரிப்பது.

2. தமிழ் மக்களது பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிப்பது.

3. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது.

4. மலையகத் தமிழ் மக்களது குடியுரிமையை அங்கீகரிப்பது.

மலையகத் தமிழ் மக்களது பிரச்சனையையும் இனப் பிரச்சனைத் தீர்விற்கான பேச்சுவார்த்தையில் முன்வைத்தமை அதுவே முதல் முறையாகும்.

  puli
மூன்று நிலைப்பாடுகள்.

இந்த இடத்தில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக வடக்கு- கிழக்கு தமிழ் அமைப்புகள் மத்தியில் காணப்பட்ட மூன்று நிலைப்பாடுகளை குறிப்பிட்டேயாக வேண்டும்.

முதலாவது நிலைப்பாடு– தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்பட்டதாகும்.

மலையகத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு- கிழக்கில் வந்து குடியேற வேண்டும் என்று சொன்னது கூட்டணி.

இரண்டாவது நிலைப்பாடு- ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல். எஃப். இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது.

ஈழம் என்பதில் மலையகமும் அடங்கும். ஈழப் புரசிக்கு மலையகப் பாட்டாளிகளே தலைமைச் சக்திகள் என்று அவை கூறிக்கொண்டிருந்தன.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அந்த முடிவை மாற்றிக்கொண்டது.

மூன்றாவது நிலைப்பாடு மலையக மக்கள் தமது உரிமைகளுக்காக தாமே போராட வேண்டும்.

மலையகத்தில் போராடும் அமைப்புகளுக்கு ஈழப்போராளிகள் உதவி செய்யலாம்.

இந்த மூன்றாவது நிலைப்பாட்டை புலிகள் இயக்கமும் கடைப்பிடித்தது.

முதல் இரண்டு நிலைப்பாடுகளும் வெறும் கற்பனைகளாக இன்று ஏற்கப்பட்டுவிட்டன.

இனித் திம்பு பேச்சுக்கு செல்லலாம்.

திம்புவில் பேச்சுவார்த்தையை இயக்கங்கள் குழப்பக்கூடும் என்று இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

இயக்கங்களின் நோக்கமெல்லாம் பேச்சில் அல்ல, போரை தொடர்ந்து நடத்தி ஈழம்வரை செல்வதுதான் என்று இந்தியாவுக்கு தெரியும்.

எனவே இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இந்தியா திட்டமிட்டது.

antan

நாடு கடத்தும் திட்டம்.

23.8.85 அன்று இரவு புலிகள் இயக்க ஆலேர்சகர் அன்ரன் பாலசிங்கத்தையும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனையும் கைது செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக திம்புப் பேச்சில் கலந்துகொள்ள வந்திருந்தவர் சட்டத்தரணி சத்தியேந்திரா.

தமது தரப்பில் திம்புவில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து அவரை இறக்குமதி செய்திருந்தது ரெலோ. (இப்போது அவர் புலிகளது ஆதரவாளராக இருக்கிறார்)

அவரையும் கைதுசெய்து நாடுகடத்துவதற்காக இந்திய அதிகாரிகள் தேடுதல் நடத்தினார்கள். அவர் சென்னையில் தலைமறைவாகிவிட்டார்.

அன்ரன் பாலசிங்கத்தையும் சந்திரகாசனையும் சென்னையிலிருந்து இரவோடு இரவாக பம்பாய்க்கு கொண்டு சென்றார்கள்

அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துப்போனார்கள்.

இருவரையும் நாடுகடத்தும் ஆயுத்தங்கள் துரிதகதியில் நடத்தப்பட்டன. அதேசமயம் சென்னையில் இருந்த நான்கு இயக்க கூட்டமைப்புத் தலைவாகள் கூடி ஆராய்ந்தார்கள்.

அன்ரன் பாலசிங்கம் திரும்பிவராமல் பேச்சில் பங்குகொள்ள முடியாது என்று பிரபாகரன் தெரிவித்துவிட்டார்.

பேச்சில் கலந்து கொள்வதானால் அன்ரன்பாலசிங்கம் வரவேண்டும். பேச்சுவார்த்தையில் அவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று நான்கு இயக்கக் கூட்டமைப்பு முடிவு செய்தது.

அந்த முடிவு இந்திய அரசுக்கும் அறிவிக்கப்பட்டது.

மாறிய முடிவு

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், ஈழப்போராளி அமைப்புகளுக்குச் சார்பான தமிழ்நாட்டு அமைப்புகளும் கடுமையாக கண்டிக்கத் தொடங்கிவிட்டன.

நிலமையைக் கவனித்த இந்திய அரசு அன்ரன் பாலசிங்கத்தையும், சந்திரகாசனையும் நாடுகடத்தும் திட்டத்தை கைவிட்டது.

பேச்சுவார்த்தையில் ஏற்பட இருந்த தடை நீக்கப்பட்டது,

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒருவகையில் நாடுகடத்தும் உதவிகரமாக அமைந்தது என்றே கூறவேண்டும்.

ஈழப்போராளிகள் விடயத்தில் கண்டிப்பாகவே நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ள அது உதவியது.

தான் ஒரு நியாயமான மத்தியஸ்தர் என்று இலங்கை அரசுக்கும், வெளியுலகுக்கும் முன்பாக இந்தியா செய்த பிரகடனம் என்று அதனைக்குறிப்பிடலாம்.

43ஒரு கூத்து

திம்பு பேச்சுவார்த்தை ஆரம்பமான முதல்நாள் ஒரு கூத்து நடந்தது.

இயக்கங்களும், கூட்டணியும் பொதுவான நிலைப்பாட்டையே முன்வைப்பது என்று, பேச்சுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதல்லவா??

அதன்படி பேச்சு மேசையில் நான்னு அம்சதிட்டம் முன்வைக்கப்பட்டது.

அதே நேரம் ஈரோஸ் சார்பாக கலந்துகொண்ட சங்கர்ராஜீ தனியாக ஒரு திட்டத்தை விநியோகித்துவிட்டார்.

ஏனைய இயக்க பிரதிநிதிகளுக்கு நெத்தியடியான அதிர்ச்சி.

கூட்டணிதான் ஏதாவது கோளாறு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமிர்தலிங்கம் இயக்கங்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்துவிட்டார்.

நான் இயக்கக் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு ஈரோஸ் இயக்கம் அப்படிக் குறுக்கால் ஒரு ஓட்டம் ஓடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதனை ஒரு திட்டமாக முன்வைக்கவில்லை. விவாதத்திற்காகவே முன்வைப்பதாக சங்காஜீ விளக்கம் சொன்னார்.

திம்புவில் இருந்து தொலைபேசி மூலம் சென்னையில் இருந்த தலைவர்களுகுச் செய்தி வந்தது.

balakumaran-300x209பாலகுமார்

சென்னையில் நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் சங்கர்ஜியின் நடவடிக்கை தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரோஸ் பாலகுமாரிடம் ஏனைய மூன்று இயக்கத் தலைவாகளும் கேள்விக் கணைகள் தொடுத்தனர்.

பாலகுமார் திணறிப்போனார்.

“சங்கர்ராஜீ இப்படி செய்வார் என்று எனக்கு தெரியாது. அது பிழைதான். ஈரோஸ் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

சங்கர்ராஜீ முன்வைத்த யோசனை திரும்பப் பெறப்படும்” என்று கூறினார்.

பிரபா சொன்னது

ஈரோஸின் முடிவில்லாமல் சங்கர்ராஜி செயற்பட்டிருக்க முடியாது என்றே ஏனைய இயக்கத் தலைவாகள் கருதினார்கள்.

கூட்டமைப்புக் கூட்டம் முடிந்தபின் ஈ.பி.ஆர்.எல். எஃப் தலைவர் பத்மநாபாவிடம் பிரபாகரன் சொன்னது இது,..

“ஈரோஸ் இப்படி செய்யுமென்று எனக்கு தெரியும்.ஈரோசையோ, ரெலோவையோ நம்பி நாம் கூட்டமைப்பில் நாம் சேரவில்லை. உங்களை நம்பிதான் சேர்ந்திருக்கிறோம்” என்றார் பிரபாகரன்.

இந்த இடத்தில் மேலும் ஒரு சம்பவம் :

ஒருமுறை பத்மநாபா தனது T :V :S .50 மோட்டார் சைக்கிளில் சென்னை அடையாறில் உள்ள புலிகளது அலுவலகத்திற்குச் சென்றார்.

அவர் தனியாக வந்ததைக் கண்டதும் பிரபாகரன் கேட்டார்,”பாதுகாப்பில்லாமல் இப்படி வருகிறீர்களே?” அதற்கு பத்மநாபா சொன்ன பதில் : ” நாங்கள் மக்கள் இயக்கம். மக்கள் எங்குமிருப்பதால் அதுதான் பாதுகாப்பு” அதைக் கேட்டு பிரபாவின் பதில் ஒரு சிரிப்பு மட்டுமே.

EP-with-IPKF
திம்புவில் சர்ச்சை

திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரிதான் முக்கிய பாத்திரம் வகித்தார்.

ரொமேஷ் பண்டாரியை இயக்கங்களுக்கு பிடிக்காது.

இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்வார் ரொமேஷ் பண்டாரி. அவரை ஜே.ஆர். தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார் என்று இயக்கங்களுக்குச் சந்தேகம்.

ரொமேஷ் பண்டாரிக்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலாளர்களாக இருந்தவாகள் இயக்கத் தலைவர்களோடு நல்ல உறவுகளை வைத்திருந்தனர்.

திம்பு பேச்சில் சூடான ஒரு கட்டத்தில் ரொமேஷ் பண்டாரி இயக்கப் பிரதிநிகளை நோக்கிச் சொன்ன வார்த்தை இது : ‘BLOODY BOYS’ (கெட்ட பையன்கள்)

இயக்கப் பிரதிநிதிகள் கொதித்துப் போனார்கள். பிரச்சனை பெரிதாகும் என்று உணர்ந்து கொண்ட ரொமேஷ் பண்டாரி இறுதியில் மன்னிப்பு கேட்டார்.

அதேசமயம் திம்பு பேச்சில் கலந்துகொண்ட இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் பார்வையில் ஒருபடி உயர்ந்தும் விட்டார்.

images-53ஜே.ஆர்.உறுதி

திம்புவில் பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் தனத கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜே.ஆர்.சொன்ன உறுதிமொழி இதுதான் :

“திம்புவில் சமரசப் பேச்சு நடந்தாலென்ன, நடக்காவிட்டால் என்ன தீவிரவாதிகளின் முகாம்களைத் தேடிக்கண்டுபிடித்து அழிப்பதில் முப்படைகளும் ஈடுபடும்.

இலங்கைத் தீவில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தமது மரபுவழித்தாயகம் என்று தமிழர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இதை எனது அரசோ, ஏற்கமாட்டோம்.”

இதேவேளை யூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையான போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது. இந்திய அரசின் தலையீட்டால் அக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் போர்நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டபோது, போர்நிறுத்த மீறல்களைக் கண்காணிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது.

போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதில் தனது அரசு நியாயமாக நடந்து கொள்கிறது என்று நிரூபிக்க ஜே.ஆர். செய்த தந்திரமே கண்காணிப்புக் குழுவாகும்.

கார்டியனின் கணிப்பு

இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் 19.06.1985இல் டேவிட் பலிஸ்டர் என்பவா எழுதிய கட்டுரை ஒன்று முக்கியமானது.

டேவிட் பலிஸ்டர் தளபதி பிரிகேடியர் நளின் செனிவரத்னாவை பேட்டி கண்டார். அப்போது நளின் செனிவிரத்னா பின்வருமாறு சொன்னாராம்;

“தமிழீழ விடுததைப் புலிகளது கொரில்லாப் போரை எம்மால் வெற்றி கொள்ள முடியாது. எமது முகாம்களை மூடியுள்ள மணல் மூட்டைகளைக் கடந்து எமது ஆணை செல்லாது.”

டேவிட் பலிஸ்டர் யூ.என்.பியின் மூத்த அமைச்சர் ஒருவரையும் சந்தித்தார். அந்த அமைச்சர் பின்வருமாறு கூறியிருந்தார்.


“ஜயவர்த்தனா பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு 43 ஆண்டுகாலம் காத்திருந்தார். தமிழர் பிரச்சனையைத் தீர்க்கவும் ஒரு கால அட்டவணையை வைத்திருந்தார்.

ஆனால் இப்போது அவரிடம் பிடிஇல்லாமல் போய்விட்டது. அவர் கொஞ்சம் குழம்பிப்போய் இருக்கிறார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு தடவையும் நாமே தமிழர்களைத் தாக்கியிருக்றோம். அவர்கள் ஓடினார்கள், இப்போது அவர்கள் எம்மைத் திருப்பித் தாக்குகிறார்கள். அவர்கள் மீது நாம் மரியாதை கொண்டுள்ளோம். கூடிய சலுகைகளை நாம் கொடுத்தேயாக வேண்டும்.”

இவற்றையெல்லாம் வெளியிட்ட கார்டியன், இறுதியில் தனது கணிப்பைச் சொல்லியிருந்தது.

“பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்று கூறிவிடமுடியாது.” அதுதான் கார்டியன் வெளியிட்ட கணிப்பு. அந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் காரியங்கள் அரங்கேற ஆரம்பித்தன.

(அரசியல் தொடர்… எழுதுவது அற்புதன்)
தொடர்ந்து வரும்..

 

கூட்டணி தலைவர்கள் ‘ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்’ ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46)

 

Share.
Leave A Reply