யாழ். அரியாலை முள்ளி பகுதியில் மணல் அகழ்ந்து கொண்டிருந்தவர்களால், இரு மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பெண்கள் அணியும் ஆடைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மேற்படி எலும்புக் கூடுகளை கண்டெடுத்த போதும், அவை பற்றி வெளியில் கூறாதிருந்த நிலையில், வேறொருவர் மூலமாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் கைப்பை, பென்சில், குடை மற்றும் இரு விதமான செருப்புகள் ஆகியனவும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போர்காலத்தில் இந்தப்பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இதுதொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

ariyalai-bone_01ariyalai-bone_02ariyalai-bone_03ariyalai-bone_04ariyalai-bone_05ariyalai-bone_06ariyalai-bone_07

Share.
Leave A Reply