ஜேர்மனியின் யூ டியூப் இணையதளமான ‘பிலிக்’ வியக்க வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘Blick’ என்ற அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவானது 5.33 நிமிடங்களுடன், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ஏர்லைன்ஸ் A320 ரக விமானம் 250 பயணிகளுடன் சுரிச்சில் இருந்து ஜெனிவாவுக்கு புறப்படுகிறது.
சுமார் 39,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறக்கும் போது விமானி அறையின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பார்ப்பவர்களுக்கு தாமே விமானி இருக்கையில் இருந்து விமானத்தை கட்டுப்படுத்தும் உணர்வையும் ஏற்படுத்துகிறது. தவிர, 360 டிகிரியில் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
சுரிச்சில் இருந்து விமானம் புறப்படுவது முதல் ஜெனிவாவில் தரையிறங்குவது வரை அனைத்தும் தத்ரூபமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வியக்க வைக்கும் வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.