சிம்பு தோற்றார்… இரு துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி!

சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் கைப்பற்றியது விஷால் அணி. கடைசியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சங்க துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் விஷால் அணியைச் சேர்ந்த கருணாஸும், பொன் வண்ணனும் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் சரத்குமார் அணியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சிம்புவைத் தோற்கடித்துள்ளனர். இந்தத் தேர்தலில் கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார்.

அவரை எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார். பலரும் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். அவர் 1107 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஆனால் அவரை எதிர்த்த பொன்வண்ணன் 1235 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றார். இதன் மூலம் நடிகர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பதவிகளையும் விஷால் அணி அபாரமாக வென்றுள்ளது.

விஷால் அணிக்கு தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய திரையுலகமே வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர் தேர்வு: ‘பாண்டவர் அணி’ வெற்றி!!

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் வெற்றிபெற்றுள்ளார். பொதுச் செயலாளராக விஷாலும் பொருளாளராக நடிகர் கார்த்தியும் தேர்வுபெற்றுள்ளனர்.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசருக்கு 1344 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமாருக்கு 1231 வாக்குகளும் கிடைத்துள்ளன.

18-1445189789-vishal435

1445 வாக்குகளைப் பெற்ற நடிகர் விஷால் தற்போதைய பொதுச் செயலாளர் ராதாரவியைத் தோற்கடித்து அந்தப் பதவியைக் கைப்பற்றினார்.

பொருளாளர் பதவிக்கு விஷால் தரப்பில் நடிகர் கார்த்தியும் சரத்குமார் தரப்பில் எஸ்எஸ்ஆர் கண்ணணும் போட்டியிட்டனர்.

18-1445191716-karthi-smileee-600இதில் 1493 வாக்குகளைப் பெற்று கார்த்தி வெற்றிபெற்றார். எஸ்எஸ்ஆர். கண்ணணுக்கு 1080 வாக்குகளே கிடைத்தன.

இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கியப் பதவிகள் அனைத்தையும் ‘பாண்டவர் அணி’ என்று அழைக்கப்பட்ட நடிகர் விஷாலின் அணி கைப்பற்றியுள்ளது.

இந்த முடிவுகளை தேர்தலை நடத்திய முன்னாள் நீதிபதி பத்மனாபன் அறிவித்தார்.

Share.
Leave A Reply